Marina Traffic Diversion: மெரினா போற ப்ளான் இருக்கா? அப்போ இனிமே இந்த வழியா போக முடியாது.. முழு விவரம் இதோ..
வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து வழி மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, போக்குவரத்து வழி மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாள் என்றாலே மக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் வெளியே செல்வது வழக்கம். அதுவும் கடற்கரை என்றால் மக்களுக்கு அலாதி இன்பம். வார இறுதி நாள் ஏராளமான மக்கள் சென்னை மெரினா கடறகரைக்கு செல்வது வழக்கம். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து வழி மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில்,
“அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு 27.05.2023 முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
1. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.
2. கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப் பட்டு பாரதி சாலை - பெல்ஸ் ரோடு வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
3. ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை - பாரதி சாலை சந்திப்பில் திருப்பப் பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம் ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.
4. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது (பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்)
5. நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை பெல்ஸ் ரோடு வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
6. பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகளங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்)” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IT Raid: வருமான வரித்துறையினருடன் மோதல் விவகாரம்; 50க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
Vegetable Price: இன்னைக்கு என்ன சமைக்கலாம்? காய்கறி விலையில் அதிரடி மாற்றமா? விலைப் பட்டியல் இதோ!