மேலும் அறிய

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ABP Southern Rising Summit 2023 - சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ABP Suthern Rising Submit 2023 கருத்தரங்கு இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமாக திகழ்வது ஏபிபி குழுமம். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு அச்சு ஊடகமாக உருவான ஏபிபி நிறுவனம் தற்போது தொலைக்காட்சி, டிஜிட்டல் என அனைத்து தளங்களிலும் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

ABP Southern Rising Submit 2023:

இந்த நிலையில், தென்னிந்தியாவை மையப்படுத்தி தெற்கின் எழுச்சி என்ற பெயரில் “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு தற்போது சென்னையில் உள்ள பிரபல தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நடிகர் ராணா டகுபதி, நடிகை ரேவதி, நடிகை குஷ்பு உள்பட பலரும் பங்கேற்பதால் சமூக வலைதளங்களில் இந்த கருத்தரங்கு மிகப்பெரிய கவனிப்பை பெற்றுள்ளது.

தேசிய அளவில் ட்ரெண்ட்:

இதன்காரணமாக, இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் ABP Southern Rising என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. காலையில் தொடங்கிய இந்த கருத்தரங்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்பு, ஆளுநர்கள், முதலமைச்சர்கள் இடையேயான உறவு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பகிர்நது கொண்டார்.

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான தெலுங்கு நடிகர் ராணா டகுபதி பங்கேற்று திரைத்துறையில் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர். நடிகை ரேவதி பங்கேற்று தனது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர்கள், பிரபலங்கள் பங்கேற்பு:

தற்போது, மதியம் தொடங்கி நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பிரபல நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். எழுத்தாளர் குர்சரண்தாஸ் பங்கேற்று அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி, நடிகை குஷ்பு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாலை நிகழ்வில் பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவின் பன்முக பிரபலங்களும் ஒரே இடத்தில் குவிந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர்களது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அவர்களது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்த ABP Southern Rising Submit 2023 நிகழ்ச்சியை ஏபிபி லைவ்.காம், ஏபிபி நாடு மற்றும் ஏபிபி தேசம் ஆகிய வலைதளங்களிலும், யூ டியூப் பக்கங்களிலும் காணலாம்.

மேலும் படிக்க: ABP Southern Rising Summit 2023 LIVE: ”நாட்டிற்கு நிறைய நல்லது செய்தார் நேரு” - எழுத்தாளர் குர்சரண் தாஸ்"

மேலும் படிக்க: ABP Southern Rising Summit 2023: எறியப்படும் கற்களை வைத்து கோட்டை எழுப்புவேன்.. - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget