Aavin Hike : ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. எந்தப் பொருள் எவ்வளவு உயர்ந்திருக்கு? முழு பட்டியல் இதோ
தயிருக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஆவின் தயிர், மோர், நெய் போன்றவற்றின் விலை உயர்ந்திருக்கிறது.
மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களான ஜிஎஸ்டி வரி 5% விதிப்பை தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல் தனியார் நிறுவன பால் பொருட்கள் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை 15 சதவிதம் அளவிற்கு உயர்த்தி் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமும் இன்று முதல் தயிர், லஸ்ஸி, நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தியுள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தயிருக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஆவின் தயிர், மோர், நெய் போன்றவற்றின் விலை உயர்ந்திருக்கிறது.
எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை உயர்ந்துள்ளன என்பது குறித்த முழு பட்டியல் பின்வருமாறு:
தயிர் விலை விவரம்:
ஸ்பெஷல் தயிர் 100 மில்லி ரூ.12
ஸ்பெஷல் தயிர் 200 மில்லி ரூ.28
பாக்கெட் தயிர் 500 மில்லி ரூ.35
சேஷட் தயிர் 200 மில்லி ரூ.18
ப்ரீமியம் கப் தயிர் 400 மில்லி ரூ.50
ப்ரீமியம் தயிர் 1 கிலோ ரூ.120
இப்போது லசி விலைப் பட்டியல் அறிவோம்:
புரோபயாடிக் லசி 200 மில்லி ரூ.18
மேங்கோ லசி 200 மில்லி ரூ.25
சாக்கோ லசி 200 மில்லி ரூ.25
ஆவின் மோர் விலை என்னவென்று பார்ப்போம்:
இம்யூனிட்டி மோர் 200 மில்லி ரூ.18
பாட்டில் மோர் 200 மில்லி ரூ.12
பாக்கெட் மோர் 200 மில்லி ரூ.8
ஆவின் நெய் புதிய விலை இதுதான்:
நெய் 1 லிட்டர் ரூ.580
நெய் 500 மில்லி ரூ.290
நெய் 200 மில்லி ரூ.130
நெய் 100 மில்லி ரூ.70
நெய் 5 லிட்டர் ரூ.2900
நெய் (டின்) 15 கிலோ ரூ.9680
நெய் (கார்டன்) 1 லிட்டர் ரூ.575
நெய் (கார்டன்) 500 மில்லி ரூ.280
ப்ரீமியன் நெய் டின் 1 லிட்டர் ரூ.630
நெய் பவுச் 100 மில்லி ரூ.65
நெய் பவுச் 15 மில்லி ரூ.12
நெய் ஸ்பவுட் 500 மில்லி ரூ.285
ஓபிஎஸ் கண்டனம்:
அத்தியாவசிய விலைப் பொருட்கள் உயர்வுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
"கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கின்ற இந்தச் சமயத்தில், சொத்து வரி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கின்ற நிலையில், மின் கட்டணம் உயர இருக்கின்ற நிலையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்கள் மீது ஐந்து விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை விதித்து இருப்பதும், இதன் அடிப்படையில் ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதும் ஏழையெளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். இவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.