மேலும் அறிய
Advertisement
ஆருத்ரா பணமோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது; எல்என்எல் நிதி மோசடியில் 9 கோடி மீட்பு - பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள்
அதேபோல், எல்என்எல் நிதி மோசடி வழக்கில் இதுவரை ரூபாய் 9 கோடி மீட்கப்பட்டுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஆருத்ரா பணமோசடி வழக்கில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், எல்என்எல் நிதி மோசடி வழக்கில் இதுவரை ரூபாய் 9 கோடி மீட்கப்பட்டுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒருமாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கூடிய விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்கள் முடக்கம்
மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும்
கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
பணத்தை திருப்பிக் கொடுத்த நடவடிக்கை
ஆருத்ராவில் முக்கிய ஏஜென்ட்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சரி பார்த்து சுமார் 2000 பேர் வரை ஏஜெண்டர்களாக பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இவற்றில் 200 ஏஜெண்டுகள் பல கோடி ரூபாய்களை முதலீடுகளாக பெற்று, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.முதல்கட் டமாக அதிக பணம் வசூலித்த 200 பேரை கண்டறிந்து தேவை ஏற்பட்டால் அவர்களை கைது செய்யவும், அதிக பணம் வசூலித்த 200 முகவர்களிடம் 30% பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ்
நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் ஆர். கே சுரேஷின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion