பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து ...7 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு... மற்ற மாணவர்களின் நிலை?
சிவகங்கை மாவட்டம் சருகனேந்தலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
சிவகங்கை அருகே பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
சருகனேந்தல் என்ற இடத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற போது தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவன் ஹரி வேலன் என்பவர் உயிரிழந்தார். வேன் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த சுமார் 20 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேம்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முனைக்குளம் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹரி வேலன் என்ற மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். வாகனத்தில் இருந்த ஆசிரியர் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளார்.சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், ஏரிக்கரை வழியே வாகனம் சென்றபோது, டயர் சேற்றில் சிக்கி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வேனுக்கு இன்று புதிய ஓட்டுநர் வந்ததாகவும், விபத்து ஏற்பட்ட உடன் அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஹரிவேலன் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்தது உறுதி செய்யபட்டுள்ளது.
மேலும் படிக்க,
West Bengal Election Result: மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தல்; திரிணாமுல் காங்கிரஸ் அபார முன்னிலை