கரூரில் 76 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி பலூன்களை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர்
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதான புறாவை பறக்கவிட்டார். இதனை தொடர்ந்து 59 பயணாளிக்கு ரூ. 101 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் என 405 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கரூரில் மாற்றுத்திறனாளிகள் தடி சிலம்பாட்டம் சுற்றி சாகசம் செய்து சக மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள மகாகவி மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழாவை ஒட்டி, சங்கத்தின் தலைவர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேர் தடி சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு, சக உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் விதமாகவும், மாற்றுத்திறனாளிகளால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாகசம் நிகழ்த்தினர். மேலும், வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடர்ந்து மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இன்று 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கவிதா கணேசன், தேசிய கொடியை ஏற்றினார் அதேபோல் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது அலுவலகத்திலும் மண்டல பொறுப்பாளர்கள் தங்களது அலுவலகத்திலும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் அந்தந்த பகுதி தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ஏராளமான இளைஞர்கள் தேசியக்கொடியுடன் உலா வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்