4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல்
Amendment: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சட்டத் திருத்தங்கள் அரசிதழில் அச்சாகி அமலானது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்சென்னையில் கழிவுநீர் இணைப்பைக் கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் சட்டத் திருத்தம் உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாகளுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என் ரவி.ஆளுநர் 4 சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, அவை அரசிதழில் அச்சாகி அமலாகியுள்ளது.
சட்ட திருத்தம்:
சில தினங்களுக்கு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், புதுக்கோட்டை , திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு, தமிழ்நாடு அரசு சார்பில்,சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. அதாவது, சட்டப்பிரிவில் இருந்த மக்கள் தொகை வரம்பில் 3 லட்சம் என்பதை என்பதை 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ. 30 கோடியில் இருந்து ரூ. 20 கோடியாக குறைக்கப்பட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் தனியார் வளாகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் இருந்து, 30 மீட்டர் தூரத்திற்குள் வாரியத்தின் கழிவுநீர் பாதை இருக்குமானால், வளாகத்தின் உரிமையாளர் , வாரியத்தின் கழிவுநீர் பாதையில் வெளியேற்றும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
மேலும், சென்னை மாநகர காவல் சட்டத்தை, மதுரை கோவை, திருச்சி, சேலம் நெல்லை, திருப்பூர், ஆகிய நகரங்களுக்கும் விரிவிப்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அரசிதழ் வெளியீடு:
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவானது, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த திருத்த மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், மசோதாக்கள் சட்ட வடிவம் பெறும் வகையில் அரசிதழில் வெளியானது.