(Source: ECI/ABP News/ABP Majha)
1 Year of Stalin Govt: உதயநிதியை அமைச்சராக்க நினைப்பது சரியா? என்ன சொன்னார்கள் தெரியுமா?
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது நல்ல முடிவா? மோசமான முடிவா? என்று அரசியல் கட்சியினரிடம் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. தி.மு.க. சார்பில் கடந்த தேர்தலில் அறிமுக வேட்பாளராக திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனாகிய நடிகரும், தயாரிப்பாளருமாகிய உதயநிதி ஸ்டாலின் களமிறங்கி அமோக வெற்றி பெற்றார்.
அவர் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவருக்கு அமைச்சரவை ஒதுக்கப்படவில்லை. அதேசமயம் அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து தொடர்பாக, ஏபிபி சிவோட்டர் இணைந்து அரசியல் கட்சியினர் நடத்திய கருத்துக்கணிப்பில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
முதல்வரின் ஓராண்டில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை பற்றி?
நல்ல முடிவு :
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்பது நல்ல முடிவு என்று தி.மு.க. கூட்டணியினர் 43.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 26.5 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 36.8 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 40 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் 13.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 33.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சியினரில் மொத்தம் 36.6 சதவீதம் பேர் இந்த கருத்தை கூறியுள்ளனர்.
நல்ல முடிவு : ஆனால் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் :
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது நல்ல முடிவுதான். ஆனால், சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியினர் 36.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 23.9 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 26.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 33.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 53.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 32.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
மோசமான முடிவு - குடும்ப அரசியலை வளர்க்கிறது :
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது மோசமான முடிவு என்றும், குடும்ப அரசியலை வளர்க்கிறது என்றும் தி.மு.க. கூட்டணியினர் 15.2 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 39.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 26.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 20 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 33.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 33.3 சதவீதம் பேரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். மொத்தம் 24.7 சதவீதம் பேரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.
மோசமான முடிவு – மற்ற காரணங்கள் :
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது மோசமான முடிவு என்று தி.மு.க. கூட்டணியினர் 4 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 9.7 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 10.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அதேபோல, மக்கள் நீதிமய்யத்தினர் 6.7 சதவீதம் பேரும், மற்றவர்கள் 8.3 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மொத்தம் 6.2 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்