மேலும் அறிய
’வேடிக்கை பார்க்க முடிவெடுத்துவிட்டேன்’ ’ஆதரவு யாருக்குமில்லை’ - டி.ராஜேந்தரின் அடுக்குமொழி அறிக்கை..
சட்டசபை தேர்தலில் லட்சிய தி.மு.கவின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
![’வேடிக்கை பார்க்க முடிவெடுத்துவிட்டேன்’ ’ஆதரவு யாருக்குமில்லை’ - டி.ராஜேந்தரின் அடுக்குமொழி அறிக்கை.. t.rajender not supported political parties ’வேடிக்கை பார்க்க முடிவெடுத்துவிட்டேன்’ ’ஆதரவு யாருக்குமில்லை’ - டி.ராஜேந்தரின் அடுக்குமொழி அறிக்கை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/27/8887de058cbe6d0a2c7379a342b6cde3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி. ராஜேந்தர்
சட்டசபை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க, தி.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், லட்சிய தி.மு.க. தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர், ”சட்டசபை தேர்தலில் லட்சிய தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. காலம், களம் சரியில்லாததால் கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடிவெடுத்துவிட்டேன்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்துகொள்ள வேண்டும் முகமூடி. பக்குவப்பட்டவனாக வாழ வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி என்று அவரது வழக்கமான அடுக்குமொழிகளில் ஆதரவு யாருமில்லை என்பதைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion