இஃப்தார் நிகழ்ச்சியில் த.வெ.க. விஜய்!
சென்னை ராயப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழத்தின் சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பெங்கேற்றார்.
விஜய், தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்த விஜய், 3000 இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் விருந்து உணவு உண்டார்.
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக தோ்தல் மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனாவும் உடன் பொதுச் செயலர் ஆனந்தும் ஏற்பாடுகளை கவனித்தனர்.
இந்நிகழ்வில், சுமார் 2000 பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள், தவெக நிர்வாகிகள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம் என்றும் அழைப்பை ஏற்று விருந்துக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் என கூறி உரையை தொடங்கி பேசினார்.
விஜய் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.