மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... வினாடிக்கு 131 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 129 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 131 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... வினாடிக்கு 131 கன அடியாக உயர்வு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 112.94 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 82.65 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... வினாடிக்கு 131 கன அடியாக உயர்வு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! களத்தில் இறங்கிய POLICE
Land issue CCTV|சிறுநீர் கழித்த மர்ம நபர்கள்தட்டிக்கேட்ட காவலாளி மீது தாக்குதல்நில உரிமையாளர் புகார்
விஜய் போட்டியிடும் தொகுதி! V-ல் ஆரம்பிக்கும் 9 இடங்கள்! ஜோசியர் கொடுத்த ஐடியா
கடலை மிட்டாய் to அர்ஜூனா விருது! ரியல் பைசன் காளமாடன்! யார் இந்த மணத்தி கணேசன்?
வருமானம் இல்லா கிராமம் முன்மாதிரி கிராமமான அதிசயம் வியந்த மாநில அதிகாரிகள் | Villupuram Village

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
Diwali Wishes 2025: தித்திக்கும் தீபாவளி; நண்பர்கள், சொந்தங்கள், ஆபிஸ் தோழர்களுக்கு நச் வாழ்த்துக்கள் இதோ!
Diwali Wishes 2025: தித்திக்கும் தீபாவளி; நண்பர்கள், சொந்தங்கள், ஆபிஸ் தோழர்களுக்கு நச் வாழ்த்துக்கள் இதோ!
Revanth Reddy: அப்படி போடுங்க சார் சட்டத்த; பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்; முதல்வர் அதிரடி
அப்படி போடுங்க சார் சட்டத்த; பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்; முதல்வர் அதிரடி
மக்களே.. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்.. உஷாரா இருக்க சுகாதாரத்துறை உத்தரவு
மக்களே.. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்.. உஷாரா இருக்க சுகாதாரத்துறை உத்தரவு
Gaza Netanyahu: “காசாவில் போர் ஓயாது“; திடீரென பல்டி அடித்த நெதன்யாகு - அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா.?
“காசாவில் போர் ஓயாது“; திடீரென பல்டி அடித்த நெதன்யாகு - அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா.?
Embed widget