மேலும் அறிய

மீண்டும் சரியத் தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்...!

’’அணைக்கு 14,192 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை முதல் 13,315 கன அடியாக குறைந்தது’’

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று சரிய துவங்கியுள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 10,440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 14,192 கன அடியாக அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 13,315 கன அடியாக குறைந்துள்ளது.

மீண்டும் சரியத் தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்...!

அணையின் நீர் மட்டம் 74.42 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 36.62 டி.எம்.சி ஆகவும், உள்ளது. இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீரின் அளவும் வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 350 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் சரியத் தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்...!

சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 112.72 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 34.54 கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,334 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6,172 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 60.85 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 16.95 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,561 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 4,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
"நாட்டை விட்டு வெளியேத்துங்க" டிரம்ப் ஸ்டைலில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குறி வைத்த அமித் ஷா
Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Embed widget