மேலும் அறிய

ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னணி ஊழியர் போல செயல்படுவதை நிறுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டு 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டி இருக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய கேவலம்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னணி ஊழியர் போல செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று கீழ்வெண்மணி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
 
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 பேரை நிலச்சுவான்தார்களால் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வெண்மணி படுகொலை சம்பவத்தில் பலியானவர்களுக்கு வருடாவருடம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி 54 ஆம் ஆண்டு நினைவஞ்சலி  நிகழ்வு கீழ வெண்மணி கிராமத்தில் எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசை வீட்டை புதுப்பித்து இன்று அனுசரிக்கப்பட்டது. செங்கொடியை ஏற்றிவைத்து வெண்மணி நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மார்க்சியம், கல்லூரி மாணவ மாணவிகள்,  திராவிட அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெண்மணி தியாகிகள் நினைவு நிகழ்ச்சியில் சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னணி ஊழியர் போல செயல்படுவதை நிறுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
 
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “எந்த நில சுவாந்தர்களுக்கு எதிராக வெண்மணி தியாகிகளின் உயிர் பறிக்கப்பட்டதோ அவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும். இதுவரை உழுபவர்களுக்கே நிலம் சொந்தமாகாமல் கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் பல்லாயிரக்கணக்கான நிலங்களை வளைத்து வைத்து இருக்கிறார்கள். உழுபவர்களுக்கே நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். 
 
மோசமான பொருளாதார கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசு, தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகள், நூற்பாலைகள் நாசமாகி விட்டன, மாநில உரிமை பறிப்பு, மொழி உரிமை பறிப்பு என அடுக்கடுக்கான தாக்குதல் மத்திய அரசால் தமிழகத்தின் மீது நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆர் எஸ் எஸ் அமைப்பின் முன்னணி ஊழியர் போல செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.  ரவி ஆளுநராக இருக்க வேண்டும்,  ஆர் எஸ் எஸ்  ஆதரவாளராக இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்துள்ளனர். கடந்த வருடம் வழங்கியது போல பொங்கல் பரிசாக செங்கரும்பை வழங்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து இருப்பதால் தமிழக முதல்வர் பொங்கல் தொகுப்புபோடு கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிப்பு போன்ற மத்திய அரசின் மோசமான தவறுகளை தமிழகத்தில் மறைக்கவே பாஜக தலைவர் அண்ணாமலை இதுபோன்ற போராட்டங்களை நடத்தி நாடகம் போடுகிறார். ரபேல் கம்பெனி வாட்ச்சை கையில் கட்டி இருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வெட்கப்பட வேண்டும். சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டு 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டி இருக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய கேவலம். இந்தியாவில் வேறு வாட்ச் கம்பெனி இல்லையா? உண்மையாகவே பணம் கட்டி வாட்ச்சை வாங்கி இருந்தால் ரசீதை காட்ட வேண்டும். ரபேல் கம்பெனியில் நடந்த முறைகேட்டை இதுவும் ஒரு முறைகேடு” என்று கூறினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget