மேலும் அறிய

"ஆளுநர் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ்காரர் ஆகவே நடந்து கொள்கிறார்" - கி.வீரமணி

ஆளுநருக்கு வேறு விதமான எண்ணம் இருந்தால் இந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலை இருக்கும் பதவிக்கு செல்லலாம்.

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார். இதையடுத்து ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “தமிழக சட்டமன்ற துவக்கவிழாவில் படிக்க வேண்டிய உரையை படிக்காமல் பாதியிலேயே வெளியேறியது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும், தனது கடமையிலிருந்து தவறிய அரசு ஊழியர் குற்றத்திற்கு ஆளாகியுள்ளார். தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தக் கூடிய கீழ்தனமான செயலில் எந்த ஒரு ஆளுநரும் ஈடுபடவில்லை. ஆளுநர் உரை என்பது அவரால் எழுதப்படுவது அல்ல,

அமைச்சரவைக் கொள்கைகளை முடிவுசெய்து இவர் மூலம் அறிவிப்பது தான் சட்டமாகும் எனவே அந்த உரையை அப்படியே படிக்க வேண்டும். மத்திய அரசின் உரையை நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் எப்படி வாசிக்கிறாரோ? அதைப்போல் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு அவர் ஏற்கனவே படிப்பதற்கு முன்பாகவே அனுப்பப்படும், அவருக்கு ஆட்சேபனை இருந்தால் தமிழக அரசுக்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் முடிவு செய்யப்படும், ஆனால் உரையை விட்டுவிட்டு படிப்பது என்பது தவறான முன்னுரை, முன்மாதிரி, அரசை அவமதிப்பு செயல் என்று கூறினார். சொந்த கருத்துக்களை படிப்பதற்கோ, நீக்குவதற்கோ சொந்த முறையில் அரசியலமைப்பு சட்டத்தில் அவருக்கு உரிமை கிடையாது. இதுவே நீண்டகாலமாக காப்பாற்றக்கூடிய மரபாகும். குறைந்தபட்ச மரபை கூட மீறி உள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மீறியது அவமதிப்பு செயல், இதுபோன்று சட்டமன்றத்தில் மோசமான நடந்துகொண்ட ஆளுநர் இதுவரை கிடையாது. அரசியலமைப்பு சட்டத்திற்கான உறுதிமொழிக்கு முற்றிலும் விரோதமான செயலாகும். தமிழ்நாட்டின் மக்களுடைய நலனுக்காக பாடுபடுவதற்காக உறுதியளிக்கிறேன் அதை காப்பாற்றுவேன் என்பதுதான் உறுதி ஏற்றது. ஆளுநர் மக்களின் நலனிற்காக என்பதுதான் தெளிவாக உள்ளது. இதற்கு முற்றிலும் விரோதமாக ஆளுநர் நடந்து கொண்டுள்ளார். அரசின் கொள்கை அறிவிப்பை ஆளுநர் படிக்க வேண்டும்.

பேரறிவாளன் வழக்கில் தமிழக ஆளுநர் குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநருக்கு தனியாக உரிமை கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு செயலாக இந்த செயல் ஈடுபட்டுள்ளார். வேண்டுமென்று மோதல் போக்கை உருவாக்க வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயல்பாக நடக்கக்கூடாது. அதற்கு மாறாக போட்டி அரசாங்கத்தை நடத்த வேண்டும், அரசின் கொள்கைகள் குறித்து அனைத்திலும் விரோதமாக மாறுபட்டு நடந்து கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக நடந்து கொள்ளவில்லை முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ்காரர் ஆகவே நடந்து கொண்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் இவர், வேறு விதமான எண்ணம் இருந்தால் இந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலை இருக்கும் பதவிக்கு செல்லலாம் என்று பேசினார். தனிப்பட்ட முறையில் ஆளுநர் ரவி கூறுவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை, மக்களுடைய வரிப்பணத்தில் சம்பள வாங்கும் ஒருவர் சட்டமன்ற மரபுகளை எல்லாம் குழிதோண்டி புதைப்பது அரசியலமைப்பு சட்டத்தில் எடுத்த உறுதிமொழிக்கு விரோதமாக உள்ளது,கண்டனத்திற்கு உரியது

மக்கள் போராட்டம் வெடிக்கும், வெடிக்க வேண்டும் என்றார். அந்த வகையில் தமிழகத்தில் 20 மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது அதற்கான காரணம் கேட்க வேண்டும் அதை செய்யவில்லை. முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் உடைய திட்டமாக உள்ளது.

எங்கெல்லாம் பாஜக ஆளவில்லையோ?அங்கெல்லாம் ஆளுநரை போட்டு ஆளுகின்ற அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஆளுநர் தான் அருவறுப்பாக நடந்து கொள்கிறார். அவர் அவமதித்தது தமிழகத்தின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருநொடிப்பொழுது கூட கவர்னராக நீடிக்க தகுதி இல்லை. இதுவரை எந்த மாநிலத்திலும் இதுபோன்று ஆளுநர்கள் நடந்து கொண்டதில்லை. தமிழக முதல்வர் தெளிவான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார் என்றால் இதைவிட வேறு அவமானம் கிடையாது. இதைத் தாண்டி பதவியில் நீடிப்பது அரசியலமைப்பு கடமையில் இருந்து தவறி உள்ளார். அவரை துளியும் இங்கு அனுமதிக்க கூடாது.

ஆளுநர் மீது நடவடிக்கையை நேர்மையான அரசாக இருந்தால் மத்தியஅரசு திரும்ப ஆளுநரை அழைக்க வேண்டும், ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் இந்த தீர்மானத்திற்கு பிறகு ஆளுநர் இருக்கக் கூடாது. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அரசு நீடிக்க கூடாது. மோதல் போக்கை உருவாக்கக் வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம் என்றும் கூறினார். மக்கள் எழுச்சிவரும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேரும் நிலை உள்ளது. அந்த இயக்கம் தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது மக்கள் பார்க்க போகிறார்கள். ஐந்து ஆண்டுகள் நல்லாட்சியாக நடக்கிறது. திராவிட மாடலா ஆட்சி நடக்கிறது உலகப் புகழ் பெறுகிறார்கள். அந்தப் பெருமை அவருக்கு வரக்கூடாது இந்த ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தாலே இந்த காரியத்தை செய்து வருகிறார். ஆளுநர் வெளியேற வேண்டும் வெளியேற்றுவதற்கான மக்கள் இயக்கம் நடக்கும். அனைத்தையும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கும்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
2161 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 - ஏன் தெரியுமா? முழு விபரம் உள்ளே...!
2161 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 - ஏன் தெரியுமா? முழு விபரம் உள்ளே...!
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
Embed widget