மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
தருமபுரி: தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - அரூர் செல்லியம்மன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்
’’டி.அம்மாபேட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கடுமையான வெள்ளப்பெருக்கு’’
தென்பெண்ணையாறு கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி மாவட்டத்தில் இருமத்தூர், கே.,ஈச்சம்பாடி, டி.அம்மாபேட்டை வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கு சென்று, விழுப்புரம், கடலூர் வழியாக கடலில் கலக்கிறது. மேலும் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள வள்ளிமதுரை அணையில் இருந்து செல்லும் வரட்டாறு, பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள வாணியாறு அணையிலிருந்து வெளியேறும் வாணியாறும், அனுமதிந்தீர்த்தம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இணைகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று இடைவிடாத கனமழை பெய்து வந்தது. இதனால் வரட்டாறு மற்றும் வாணியாறு மற்றும் மலை பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆறுகளிலும் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து, இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆற்றில் டி.அம்மாபேட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. மேலும் மழை வெள்ளம் அதிகரித்ததால், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோவில் மற்றும் அருகில் இருந்த கடைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், டி.அம்மாபேட்டை பகுதியில் உள்ள மக்கள் வெள்ளப் பெருக்கை கண்டு ரசித்த மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரூர் பகுதியில் பெய்த தொடர் கன மழையால் தரைப்பாலம் மூழுகி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்-வாகன ஓட்டிகள் அவதி.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அரூர் அடுத்த செல்லம்பட்டி ஏரிக்கு வரும் கால்வாய், முறையாக தூர் வராததால் நீர்வரத்து அதிகரித்தது சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அரூர் முதல் திருவண்ணாமலை செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குளாகி வருகின்றனர். மேலும் தரைப்பாலத்தில் இருபுறத்திலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமமும் இன்றி செல்ல கிராம மக்கள் உதவியுடன் சாலையை பாதுகாப்பாக கடக்கின்றனர். மேலும் பொதுப்பணித் துறையினர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து இருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டு இருக்காது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion