மேலும் அறிய
Advertisement
தருமபுரி: அரூர் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
பெரிய ஏரி ராஜகால்வாயை தூர்வாரி நிரந்திர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி 18 வார்டுகளில் பெரியார் நகர், தில்லைநகர், கோவிந்தசாமி நகர பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகளாகவுளம், மழைநீர் வழிந்தோடும் கால்வாய் பகுதியாக இருந்தன. இந்தப் பகுதில் வெளியேறும் மழைநீரும், அரூர் பெரிய ஏரியின் உபரி நீரும் நகரின் ராஜா கால்வாயில் கலந்து பாய்ந்தோடி வாணி ஆற்றில் கலக்கும். பொது நகரின் அனைத்து சாக்கடை கழிவுநீரும் அடித்துச் செல்லப்பட்டு கொசு உற்பத்தியை குறைக்கும் வகையில் அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்டது.
அரூர்-சேலம் பைபாஸ் சாலையில் ராஜ கால்வாய் அகலத்தைப் குறைத்து தனி நபர்கள் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தருமபுரி மாவட்டத்தில் பெய்து வருகிறது. நேற்று ஒருநாள் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்ததில், 100 மில்லி மீட்டரை கடந்தது. இதனால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர், பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், திருவிக நகர், சேலம் பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெரிய ஏரி ராஜகால்வாயை தூர்வாரி நிரந்திர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முதல் ரயில் நிலையம் வரை செல்லும் பழுதான சாலையை செப்பனிடும் பணிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார் ஆய்வு
தருமபுரி நகரையொட்டிய பகுதிகளான ஆசிரியர் காலனி, வெண்ணாம்பட்டி, ஆயதபடை குடியிருப்பு, குள்ளனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தங்களது பகுதிக்கு செல்ல வேண்டும். அதே போல் ரயில்வே தானிய கிடங்கில் இருந்து சரக்குகளை சரக்கு வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்றால், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஒட்டி உள்ள ரயில்வேக்கு சொந்தமான சாலையில் தான் செல்ல வேண்டும்.
ஆனால் இந்த சாலை மக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதாலும், மழை காலத்தில் தண்ணீர் வெளியே செல்ல இயலாத நிலையில் குளம் போல் தேங்கி கிடப்பதால், அந்த சாலையை பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பொது மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதனை அடுத்து அப்பகுதி பொது மக்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர். செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து தருமபுரி நகராட்சி, இலக்கியம்பட்டி ஊராட்சி மற்றும் தென்மேற்கு ரயில்வே துறை சார்பில் சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் பழுதான சாலையை செப்பனிட்டு புதிய தார் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு செப்பனிடும் பணிகள் துவங்கியது.
அதனையடுத்து இன்று அந்த சாலை பணியை தென்மேற்கு ரயில்வே துறை அதிகாரிகள் குழுவுடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த சாலையில் போதிய கழிவு நீர் கால்வாய் இல்லாதததை பொது மக்கள் சுட்டிகாட்டியதையடுத்து ரயில்வே துறையினர் கால்வாய் அமைக்கும் பணியினை செய்து தருவதாக கூறினர். அதனையடுத்து பாரதிபுரம் வெண்ணாம்பட்டி பகுதிகளில் அமைய உள்ள ரயில்வே மேம்பால பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தென்மேற்கு ரயில்வே தலைமை பொறியாளர் ஆர்.கே.சிங், முதண்மை துணை பொறியாளர் ரமேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion