மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்
தருமபுரி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.
தருமபுரி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.
தருமபுரி அடுத்த தேவரசம்பட்டியில் தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் மாடுகள், ஆடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும், பரிசோதனைகளும், கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகளை பாரமரித்தல் குறித்த விழிப்புணர்வும் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த கறவை மாடுகள் மற்றும் சிறந்த கன்றுகள் பாரமரிப்பாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 20 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் 200 கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கும், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும், பாரிசோதனைகளும், கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகள் பாரமரிப்பு குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்படும். எனவே, பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள இச்சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தங்களது மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கும், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசிகளும், பாரிசோதனைகளும், குடற்புழு நீக்க சிகிச்சையும் செய்துக்கொண்டு கால்நடை வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணிகள் பாரமரிப்பு குறித்த விழிப்புணர்வையும் அறிந்து பயன்பெற வேண்டும் என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.
தருமபுரியில் போக்குவரத்து விதிமீறல் புதிய அபராதம் குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் துறையினர்.
புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம், தண்டனைகள் விதிக்கப்படுகிறது. அதன்படி, தலைக்கவசம் அணியாதது, இருசக்கர வாகனத்தில் 3 போ் அமா்ந்து செல்வது, கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது, 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இயக்குவது, சாலையில் வெள்ளைக்கோட்டை தாண்டி நிற்பது ஆகிய விதி மீறல்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவா்களுக்கும், அந்த வாகனத்தில் உடன் செல்பவா்களுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஓட்டுநா் உரிமம் இல்லாதவா்களுக்கு ரூ. 5,000, தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனங்களில் செல்பவா்களுக்கு ரூ.500, ஒரு வழிப் பாதையில் எதிா் திசையில் செல்பவா்களுக்கு ரூ. 500 என பல்வேறு விதிமீறல்களுக்கு புதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தருமபுரி நகரில் நான்கு முனைச்சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, எஸ்.வி. சாலை, நேதாஜி புறவழிச்சாலை, மதிகோன்பாளையம், பென்னாகரம் சாலை, பெரியாா் சிலை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணன், சின்னசாமி ஆகியோா் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் புதிய அபராத விவரங்கள் குறித்த துண்டு பிரசுரஙங்களை வினியோகம் செய்து. விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் விதிமுறைகளை மீறுவோா்களிடமிருந்து நவீன கருவி மூலம் ஆன்லைனில் உடனடி அபராதம் வசூலிக்கப்படும். எனவே, பொதுமக்கள் அரசின் போக்குவரத்து விதிமுறைகளைப் முறையாக பின்பற்றி, தலைக்கவசம் அணிந்தும், சீட்பெல்ட் அணிந்தும் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினா். இதேபோல, மாவட்டம் முழுவதும் காவல் துறையினர், போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களிடம் புதிய மோட்டாா் வாகன சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion