மேலும் அறிய

பரிசல் பயணத்திற்கு அனுமதி - ஒக்கேனேக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

’’மசாஜ் செய்து கொள்ளவும், அருவியில் குளிக்க தடை நீடிப்பதால், மசாஜ் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவிப்பு’’

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.  இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை மற்றும் விடுமுறை நாடகளில் வருவது வழக்கம். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்று அருவிகள் சுற்றிப் பார்த்தும், மீன் உணவு சமைத்து உண்டு மகிழ்கின்றனர். 
 
பரிசல் பயணத்திற்கு அனுமதி - ஒக்கேனேக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
 
இந்நிலையில் கடந்த 6 மாதமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் குறைந்து வந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு, சுற்றுலா தளங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த வாரம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
 
பரிசல் பயணத்திற்கு அனுமதி - ஒக்கேனேக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
 
இதில் ஆயுள் மசாஜ் மற்றும் ஆறு, அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதி வழங்கியதை தொடர்ந்து  இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால், விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஒகேனக்கல்லில் குவிந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசலில் செல்ல மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்து அருவிகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் ஆயில் மசாஜ் மற்றும் அருவிகளில் குளிக்க தடை விதித்திருப்பதால், ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
 
பரிசல் பயணத்திற்கு அனுமதி - ஒக்கேனேக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
 
மேலும் பரிசல் பயணம் செய்தால் மட்டுமே அருவிகளை காண முடியும் என்பதால், பரிசல் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் பரிசல் துறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகையால் கலை கட்டியது. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், பரிசல் ஓட்டிகள் மற்றும் சமையல் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பரிசல் பயணத்திற்கு அனுமதி - ஒக்கேனேக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
 
மேலும் ஆயில் மசாஜ் செய்து கொள்ளவும், அருவியில் குளிக்க தடை நீடிப்பதால், மசாஜ் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆயில் மசாஜ் மற்றும் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
சேலம் வெள்ளிக்கொலுசுத் தொழில் சரிவு: வட மாநிலங்களுக்கு மாறும் உற்பத்தி
நெஞ்சை உலுக்கும் காட்சி! மழை வேண்டி ஏரிக்கரையில் திரண்டு பெண்கள் போட்ட ஒப்பாரி!
பயணிகளுக்கு தரமற்ற உணவு! அமைச்சரின் திடீர் விசிட்.. மாட்டிக்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்
பயணிகளுக்கு தரமற்ற உணவு! அமைச்சரின் திடீர் விசிட்.. மாட்டிக்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்
சேலத்தின் புதிய போலீஸ் கமிஷனர் யார்? - சார்ஜ் எடுத்த முதல் நாளிலே கொடுத்த அதிரடி வார்னிங்!
சேலத்தின் புதிய போலீஸ் கமிஷனர் யார்? - சார்ஜ் எடுத்த முதல் நாளிலே கொடுத்த அதிரடி வார்னிங்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget