மேலும் அறிய
Advertisement
சேலம்: நீண்ட நாட்களுக்கு பின் கொரோனா உயிரிழப்பு இன்றி ஆறுதல்!
சேலத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் உயிரிழப்பு இல்லை என்கிற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 458 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 85501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பை எண்ணிக்கை 88561 ஆக உயர்வு. மூன்றாம் நாளாக இன்றும் தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் போடப்படவில்லை. இதுவரை சேலம் மாவட்டத்தில் 7,50,465 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்திற்கு 55380 தடுப்பூசிகள் வந்தன. இதனையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் 138 மையங்களில் நாளை இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் மட்டும் தங்களின் வீட்டருகில் உள்ள மையங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி நிலவரம்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 97 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 68 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 95 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் பேர் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்த 144 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 990 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion