சேலம் மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதி; 5 பேர் உயிரிழப்பு.
சேலம் மாவட்டத்தில் மீண்டும் மிக தீவிரமாக அதிகரிக்கும் கொரோனா...
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1582 ஆக உள்ளது. மேலும் 103 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 91,552 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,961 -ஆக உயர்வு. மாவட்டத்தில் 835 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 6462 பரிசோதிக்கப்பட்டதில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்கு பிறகு ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று வரை 10 லட்சத்து 36 ஆயிரத்து 330 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி குறைந்த அளவே வருவதால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி இருப்பு இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கூடுதல் தடுப்பூசி சேலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களிலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்து தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிப்பு:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 31 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 327 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 236 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 25,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,300 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 1928 பரிசோதிக்கப்பட்டதில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 27 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 23 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 334 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 324 ஆக உள்ளது . இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,889 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,547 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2, 359 பரிசோதிக்கப்பட்டதில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )