மேலும் அறிய
போதிய இட வசதி இல்லாமல் செயல்படும் திருவாரூர் அரசு அருகாட்சியத்தை மேம்படுத்த கோரிக்கை
’’கடந்த 20 ஆண்டுகளில் 300க்கும் மேற்ப்பட்ட கண்டெடுக்கப்பட்ட சிலைகள் சென்னைக்கு அனுப்பட்டுள்ளது’’
![போதிய இட வசதி இல்லாமல் செயல்படும் திருவாரூர் அரசு அருகாட்சியத்தை மேம்படுத்த கோரிக்கை Request to upgrade the Thiruvarur Government Museum which is functioning without adequate space போதிய இட வசதி இல்லாமல் செயல்படும் திருவாரூர் அரசு அருகாட்சியத்தை மேம்படுத்த கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/0ca3ea5ccbc366bfe8dc549b9a9bbf95_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவாரூர் அரசு அருங்காட்சியகம்
அருங்காட்சியகம் என்பது கலாச்சாரம், கலை, அறிவியல் மற்றும் இயற்கை பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்சிக்கு வைக்கப்படும் அரும்பொருட்களை ஆய்வு நடத்திடவும், நமது வாழ்வியல் சூழலை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. தமிழகத்தில் 20 மாவட்ட தலைமையிடங்களில் அரசு அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவோருக்கு பொழுதுபோக்கு மற்றும் அறிவூட்டும் இடங்களாகவும் உள்ளன. திருவாரூர் அருகாட்சியம் கடந்த 1998 ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது முதல் திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் இடம் அளிக்கப்ப்பட்டு உள்ளது. போதிய இடவசதி இல்லாத நிலையில் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், வாத்திய கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.
![போதிய இட வசதி இல்லாமல் செயல்படும் திருவாரூர் அரசு அருகாட்சியத்தை மேம்படுத்த கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/8e32d1b1a71cd423e7166b7e3edc9f51_original.jpg)
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்ணிற்குள் இருந்து கிடைக்கும் புராதான பொருட்கள், சாமி சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்பட்டுள்ள பஞ்சமுக வாத்தியம் சோழர் காலத்தில் பல்வேறு திருக்கோவில்களில் இசைக்கப்பட்ட கருவியாகும். தற்போதும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்பட்டு வருவது சிறப்புக்குரியது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் அதற்குள் வைத்து பூமியில் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த தாழியை முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது. இந்த தாழி வலங்கைமான் ஆவூர் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அஸ்வாதிரம் தோண்டும்போது கிடைத்துள்ளது. இதனை முதுமக்கள் தாழி என மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆண்டு திருவாரூர் அருகே கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் பள்ளம் தொண்டியபோது புத்தர் கற்சிலை கிடைத்துள்ளது. இந்த கற்சிலை அருங்காட்சியத்தின் வாசலில் வைக்கப்பட்டுள்ளது.
![போதிய இட வசதி இல்லாமல் செயல்படும் திருவாரூர் அரசு அருகாட்சியத்தை மேம்படுத்த கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/560a3dd03844392901da7f9eba035f97_original.jpg)
பழங்கால மக்கள் பயன்படுத்திய கோடாரி, வெட்டும் கத்தி, அரிவாள், கற்கருவிகள் மற்றும் உயிரினங்கள், கற்கருவிகள், தோல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழமையான சிலைகள், படிமங்கள் ஆகியவை தனித்தனி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருகாட்சியத்தில் மேலும் பல்வேறு அரும்பொருட்கள் காட்சிப்படுத்த போதிய இடவசதியின்றி உள்ளது. பாதுகாப்பு தண்மையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் புதைந்து கிடந்து எடுக்கப்பட்ட அரிதான சாமி சிலைகள், உலோகம், ஜம்பொன் போன்ற சிலைகள் உடனியாக சென்னையில் உள்ள தலைமை அருகாட்சியத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட கண்டெடுக்கப்பட்ட சிலைகள் சென்னைக்கு அனுப்பட்டுள்ளது.
அருகாட்சியம் என்பது அந்தந்த மாவட்டத்தின் பழம் பெருமைகள், பழமை வாய்ந்த கோவில்கள் வரலாறு, கண்டெக்கப்படும் சிலைகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் அறிந்து கொள்ளவும், ஆய்வு மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் அமையும். ஆனால் இதற்கான போதிய இடவசதி இல்லாத வகையில் திருவாரூர் அருகாட்சியம் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ளதால் வெளியில் அனைவரும் அரிய வாய்ப்பு இல்லாமல் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழம் பெருமைகள், கண்டெக்கும் சிலைகள் என அனைத்தும் இடம் பெற்றிடும் வகையில் போதிய இடவசதியான கட்டிடத்தில் அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் அருகாட்சியம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion