மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்..

இந்தியாவை காப்பாற்ற, தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல ஒரு கூட்டணியை இப்போதே ராகுல்காந்தி மற்ற மாநிலங்களில் அமைக்க முயற்சிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US: 

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ”தமிழகத்தில் பா.ஜ.க.வால் வேரூன்ற முடியாததால், அதிமுகவை அச்சுறுத்தி, மிரட்டி அவர்கள் நிழலில் காலூன்ற முயற்சிக்கின்றனர். மதவாத கும்பல்களிடம் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியாவை காப்பாற்ற, தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல ஒரு மதச்சார்பற்ற கூட்டணியை, இப்போதே ராகுல்காந்தி மற்ற மாநிலங்களில் அமைக்க முயற்சிக்கவேண்டும்” என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும்  - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்..

மேலும், ”கருணாநிதியின் உடலை அண்ணாவின் நினைவிடம் அருகே அடக்கம்செய்ய ஆறடி நிலம் கொடுக்காதவர்கள், இனியும் தமிழக ஆட்சியில் இருக்கலாமா? கருணாநிதி மறைந்தபோது மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் என்ன உதவிவேண்டும் என்று கேட்டபோது, முதல்வரிடம் சொல்லி அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க சொல்லுங்கள் என்று சொல்லியும் அவர்கள் எதையும் செய்து தரவில்லை” என்று பேசினார். 

”தமிழக முதல்வர் முகக்கவசம் அணிந்துள்ளார், முகக்கவசம் அணிவதால், அதற்குப் பின்னால் உள்ள முகம் யார் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியாது; முதல்வரின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தோற்றம் அங்கிருக்கும்” என்று இதே கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: dmk Congress Stalin assembly election 2021 rahulgandhi

தொடர்புடைய செய்திகள்

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.

மயிலாடுதுறை:

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!