ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் ; மோடி வருகை எப்போது?
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, தமிழகத்தை விட மேற்கு வங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது
திமுக கூட்டணியில் சார்பில் சேலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் முதல் முறையாக ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் மாநிலத் தலைவர்களே பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, தமிழகத்தை விட மேற்கு வங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்னும் தமிகத்தில் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. திமுக கூட்டணி தரப்பிலும் உள்ளூர் தலைவர்களே பிரச்சாரத்தில் பிரதானமாக பங்கு பெற்று வருகின்றனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. @RahulGandhi அவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.

நாள்: 28-03-2021
இடம்: சேலம்#TNElection pic.twitter.com/bkjRW5SwYR
— DMK (@arivalayam) March 24, 2021

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அசாம், கேரளா உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 28ம் தேதி திமுக கூட்டணி சார்பில் சேலத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மு.க. ஸ்டாலினுடன் முதல் முறையாக இணைந்து பங்குகொள்ளும் பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, காங்கிரஸ் உடன் பிற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் பங்குகொள்ள உள்ளனர்.