மேலும் அறிய
Advertisement
வேட்டி, சட்டையில் மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை சுற்றுவட்ட சாலையில் உள்ள அம்மா திடலில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, பிரதமர் மோடி நேற்றிரவு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர், அங்கிருந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வேட்டி, சட்டையுடன் சாமி தரிசனம் செய்த பிரதமருக்கு கோயில் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ள பரப்புரைக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion