3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
TVK District Secretaries 3rd List: தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமித்து, 3ம் கட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே 2 கட்டமாக 38 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் உட்பட மொத்த 47 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளின் பெயர் விவரங்களை தெரிந்து கொள்வோம்.
120 மாவட்டங்களாக பிரித்த விஜய்:
தமிழ்நாட்டில் , சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில், கட்சியை பணியை வேகப்படுத்தும் வகையில், கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் விஜய் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், அதன் முதல் பணியாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், அதை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்துள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வகையிலான முடிவை எடுத்திருக்கிறார்.
இந்நிலையில், 57 மாவட்டங்களுக்கான மாவட்ட பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
புதிய 19 மாவட்டங்கள் நிர்வாகிகள்
இந்நிலையில், இன்று புதிதாக 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அவர்களை நேர்காணல் செய்து, கட்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, நிர்வாகிகளை நியமனம் செய்தார். இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, 19 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, விஜய் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
57 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியல்
19 மாவட்டத்திற்கான, அனைத்து நிர்வாகிகளின் பெயர் விவரங்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். பின்னர், எந்த மாவட்டத்திற்கான நிர்வாகிகள் விவரங்களை, தெரிந்து கொள்ள வேண்டுமோ, அந்த மாவட்டத்தின் மீது கிளிக் செய்யவும். 57 மாவட்ட தவெக நிர்வாகிகள் பட்டியல்
”தோழர்களே ஒத்துழைப்பு நல்கிடுக”
இந்நிலையில், இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தெரிவித்ததாவது, “ தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
— TVK Vijay (@tvkvijayhq) January 31, 2025
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/XToemp0ecI
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்…
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதவ் உள்ளிட்டவர்களுக்கும் கட்சியின் முக்கிய பொறுப்புகளையும் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்.
Also Read: தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

