Top 10 News: விஜயுடன் பிரசாந்த் கிஷோர்! 45 கட்சிகளுக்கு தமிழக அரசு அழைப்பு - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

விஜயுடன் பிரசாந்த் கிஷோர்:
தவெக 2வது ஆண்டு தொடக்க விழா மேடைக்கு பிரசாந்த் கிஷோருடன் வருகை தந்த அக்கட்சியின் தலைவர் விஜய் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
45 கட்சிகளுக்கு அழைப்பு:
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மொத்தமாக 45 கட்சிகளுக்கு அழைப்பு.திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, IUML பாமக, தேமுதிக, மநீம, தமாகா, அமமுக, பாஜக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
விபத்து - 5 பேர் உயிரிழப்பு
குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழப்பு விபத்தில் செல்வராஜ், மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் உயிரிழப்பு காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் விபத்தில் உயிரிழப்பு.
நிறைவு பெறும் மகா கும்பமேளா
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா இன்றோடு நிறைவு பெறுகிறது.திரிவேணி சங்கமத்தில் இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் நீராடி வழிபட்டு உள்ளதாக தகவல். நிறைவு நாள் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம்.
அமித்ஷா கோவை வருகை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை வந்த அமித்ஷாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்; பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, ஈஷா சிவராத்திரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்கிறார்.
எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி
"500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச்.ராஜா சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல; காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அதுதான் அறிவுடமை" மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
உலக சாதனை:
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை.2019ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வின்போது 10,000 பேர் பங்கேற்றிருந்தனர்.
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் இங்கிலாந்து மோதல்.லாகூரில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை.
தீ விபத்து:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் நேற்று நள்ளிரவு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு - ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
முதல்வர் ஸ்டாலின் பேச்சு:
தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டும் வகையில் உருவாக்கி இருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்






















