நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நாளை மறுநாள் முதல் முதல்வர் காணொலி மூலமாக பிரச்சாரம்
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணித் தலைவர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் காணொலி மூலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 6-ஆம் தேதி ( நாளை மறுநாள்) முதல் வரும் 17-ந் தேதி வரை காணொளி மூலமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். காணொலி காட்சி மூலமாகவே தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கொரோனா, ஒமிக்ரான் காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





















