மேலும் அறிய
2026 கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குகிறது - சமூக நல்லிணக்கத்திற்கான வாய்ப்பு!
2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கு, தகுதியான நபர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
2026-ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியான நபர்கள், https://award.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.
”கபீர் புரஸ்கார் விருது”
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர், குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படைவீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக கபீர் புரஸ்கார் விருதினை பெற தகுதியுடையவராவர்.
2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருது
இவ்விருதானது ஒரு சாதி, இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள், பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில், அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. எனவே, 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கு, தகுதியான நபர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து, அதன் விபரங்களை வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்கத்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















