மேலும் அறிய
Thiruparankundram Issue : ”மத மோதல் ஏற்படுத்த முயற்சி” ஹெச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு – கைதா..?
ஹெச்.ராஜா மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறி சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஹெச்.ராஜா
Source : whats app
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - உயர்நீதிமன்ற உத்தரவுபடி இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜ.க., மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 4பிரிவுகளின் கீழ் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு.
மதுரை அமர்வு உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் 4-ஆம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக கூறி மாநிலம் முழுவதும் அழைப்புவிடுக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் காவல்நிலையித்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே மதுரையைச் சேர்ந்த சுந்தர வடிவேல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையை ரத்து செய்ய கோரியும் தொடரப்பட்ட வழக்கில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் வழங்கி, மதுரை அமர்வு உத்தரவிட்டது.
ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த உத்தரவில் ஆர்ப்பாட்டத்திற்கு. காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். 1 மைக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக்கூடாது, ஆர்ப்பாட்டம் முழுவதுமாக வீடியோபதிவு செய்யப்பட வேண்டும்" உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறி சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பெண் தொழில் முனைவோரா நீங்க..? இதோ உங்களுக்கான சூப்பர் செய்தி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Govt Job: ஹேப்பி நியூஸ்.. இந்த ஆண்டு எவ்வளவு அரசு காலி இடங்கள் நிரப்பப்படும்?- டிஎன்பிஎஸ்சி தலைவர் பதில்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















