காஞ்சிபுரம் கோயிலில் சாமி தரசினம்.. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்...! தைப்பூசத்தை கொண்டாடிய சசிகலா!
காஞ்சிபுரத்தில் சாமி தரிசனம் செய்த சசிகலா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த சசிகலா சமீபகாலமாக அ.தி.மு.க.வை கைப்பற்றியே தீருவேன் என்று கூறும் ஆடியோக்களும், அவரது பேட்டிகளும் அவ்வப்போது பரப்பாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 18-ந் தேதி தைப்பூச திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று கோவில்கள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில், தைப்பூசத் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சசிகலா இன்று நேரில் சென்றார். அங்கு சசிகலா சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர், சுவாமிக்கு வெள்ளி கவசம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றும் சிறப்பு தரிசனம் செய்தார்.
முருகன் கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த சசிகலா, கோவிலுக்கு வெளியே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் அங்கிருந்த பொதுமக்களுக்சகு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சசிகலா வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் அ.ம.மு.க. தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் திரண்டனர். மேலும், நலத்திட்ட உதவிகள் என்பதால் பொதுமக்களும் குவிந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலா, கோவில்களுக்கு செல்வதை அடிக்கடி வழக்கமாக கொண்டுள்ளார். சட்டசபை தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த வேளையில், அவர் அப்போது எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்தார்.
தேர்தல் முடிவுகளின்போதும் பெரியளவில் கருத்துக்களை தெரிவிக்காத சசிகலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களிடம் தொலைபேசி மூலமாக அ.தி.மு.க.வின் தலைமையை மீட்பேன் என்று பேசியது வைரலாகியது. அப்போது முதல் பல ஆடியோக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. சசிகலாவும் அ.தி.மு.க.வின் தலைமையை மீட்பேன் என்றும் அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சசிகலா இதுபோன்ற நலத்திட்ட உதவிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : நல'எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
மேலும் படிக்க : EXCLUSIVE | கெரியர், பணம், திருமணம் தாண்டிய உறவு: அதிகரிக்கும் பிரபலங்களின் மண முறிவுகள்..? காரணம் என்ன?
மேலும் படிக்க : என்னது? பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் டான்ஸரா...? திரைப்பயணம் ஒருப்பார்வை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்