மேலும் அறிய

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல,மது ஆலைகளின் நலனுக்கான அரசு என மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்

அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சம் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது குடும்பங்களின் உடைமைகளை பறிக்கும் வண்ணம் மீண்டும் டாஸ்மார்க் கடைகளை திறந்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 17 ம் தேதி போராட்டம் நடத்தப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 
 
மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் மக்களை இரு வழிகளில் மிக மோசமாக  சூறையாடியிருக்கிறது. முதலாவது மனிதர்களைத் தாக்கி நோய்வாய்ப்படுத்துவதன் மூலமான உடல்நலத் தாக்குதல் அடுத்தது மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை முடிந்தவரை அழித்து வாழ முடியாமல்  முடக்குவது ஆகும். இந்த இரு வகை தாக்குதல்களையும் இன்னும் கொடூரமாக்கும் வலிமை மதுவுக்கு  உண்டு. அதனால், குறைந்தபட்சம் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் மீளும் வரையிலாவது  மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பலமுறை வலியுறுத்தியும் கூட, அவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறந்து மிகப்பெரிய தீங்கை திமுக அரசு உண்டாக்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் .

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
மேலும் மதுக்கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்ட அடுத்த நிமிடமே பாதுகாப்பு விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கத் தொடங்கி விட்டன. பெரும்பான்மையான கடைகளில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கும் சில கடைகளில் இரு கிலோமீட்டருக்கும் கூடுதலான தொலைவுக்கும் குடிமகன்கள்  நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி அருந்தினார்கள். அவர்களுக்கு இடையில் சமூக இடைவெளி என்பது பெயரளவில் கூட இல்லை.
 
மது வாங்க வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணியவில்லை அணிந்திருந்த சிலரும் கூட வாய்க்கும், தாடைக்கும் தான் முகக்கவசம் அணிந்து  இருந்தனர். அதேபோல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதுக்கடைகளுக்கு வந்தவர்களை எல்லாம், வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்கு வந்தவர்களைப் போல வரவேற்று 5 மணிக்குள் மதுக்கடை வளாகத்திற்கு வந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் பெற்ற அனைவருக்கும் மதுப்புட்டிகள் வழங்கப்பட்டன.

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
 
மதுக்கடைகளை திறக்க நேரிட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், மதுக்கடைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தளர்வுகள்  திரும்பப்பெறப்படும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டில் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மதுவை விற்று தான் வருவாய் ஈட்டி நிர்வாகம் செய்ய வேண்டிய நிலையிலுள்ள அரசு அதை செய்யாது.தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதற்காக முதலமைச்சர் பல்வேறு காரணங்களைக் கூறியிருக்கிறார். கொரோனா குறைந்து விட்டதால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்று முதல் நாள் கூறுகிறார் கள்ள மது விற்பனையைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அடுத்த நாள் தெரிவிக்கிறார். இவை எதுவுமே உண்மை இல்லை என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும். அவர் கூறும் காரணங்கள் உண்மை இல்லை என்பதால் தான் முதலமைச்சரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது.

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்
 
 கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின்  மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும் தங்களின் வீட்டு வாசலில், கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, 5 பேருக்கு மிகாமல் கூடி, மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கறுப்புக் கொடியையும்   ஏந்தி முழக்கமிட்டு போராட்டம்  நடத்தப்படும் என அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் தல & தளபதி - காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் பட விமர்சனம்!
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் தல & தளபதி - காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் பட விமர்சனம்!
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Embed widget