தேர்தலுக்கு பிறகு மு.க.ஸ்டாலினை சந்திக்க முடியாது என முதல்வர் விமர்சனம்
தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினை மக்களால் சந்திக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரை தேர்தலுக்குப் பிறகு உங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது.

நான் உங்களில் ஒருவன். என்னை எப்பொழுதும் சந்தித்து உங்களது குறைகளை கூற முடியும்.

வரும் ஆண்டுகளிலும் மக்களில் ஒருவனாக தமிழ் நாட்டை முன்னெடுத்து செல்வேன்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 1, 2021

இந்த நிலையில், முதல்வரும். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரை தேர்தலுக்குப் பிறகு உங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது. நான் உங்களில் ஒருவன். என்னை எப்பொழுதும் சந்தித்து உங்களது குறைகளை கூற முடியும். வரும் ஆண்டுகளிலும் மக்களில் ஒருவனாக தமிழ் நாட்டை முன்னெடுத்து செல்வேன் என்று பதிவிட்டுள்ளார்.