வன்னியர் இட ஒதுக்கீடு நிரந்தரமா? தற்காலிகமா? - முதல்வருக்கு ப.சிதம்பரம் கேள்வி
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிரந்தரமானதா? அல்லது தற்காலிகமானதா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க, தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிரந்தரமானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் உறுதியளித்துள்ளார் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.

முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்?

எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 31, 2021

முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்?

எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 31, 2021

இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை! இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு! முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பா.ஜ.க. என்ன சொல்லப் போகிறது? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.