மேலும் அறிய

‘அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள்..!” - சீமான் கடும் விமர்சனம்

ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் பாஜக இருக்குமா?. அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள் என சீமான் கடும் விமர்சனம் செய்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவுதினம் நெல்லை ரஹ்மத் நகரில் வைத்து அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பெருஞ்சித்தனார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் நினைவு ஜோதியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது,

‘அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள்..!” - சீமான் கடும் விமர்சனம்

தமிழ் தேசிய அரசியலை விதைத்தவர் பாவலரேறு. அவரது நினைவுகளை கூறுவதில் பெருமை அடைகிறோம். நாட்டின் இறையாண்மை குறித்து பேசிவிட்டு நாட்டை துண்டாடும்  செயலை ஆர்.எஸ்..எஸ் பாஜக செய்து வருகிறது. நாட்டின் குடிமைகள் மீது வெறுப்பை வைத்துக்கொண்டு இறையாண்மை குறித்து பேசுகிறார். இந்து கோட்பாட்டாளர்களுக்கும், சிவனுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மதமோதல்களை தூண்டி தூண்டி நாட்டை பிரிவனை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. பயங்கரவாதிகளும் கொடுமை செய்பவர்களுமாக இருக்கின்றனர். இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 7000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன்? இலங்கையின் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா?. சீனாவின் ஒரு மாகாணமாக இலங்கையை மாற்றிவிட்டது. இலங்கையில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் கூட சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது. 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் இருந்த திமுகவிற்கு கட்சத்தீவை மீட்க நேரம் கிடைக்கவிlல்லையா? இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளபட்டு கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறைக்க நினைக்கிறார்கள். சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்பது எதற்கு? அரசின் செயல் மக்களை சென்றடையும் போது சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேவையற்றது. மத்திய அரசின் 8 ஆண்டுகாலமும், தமிழக அரசின் ஓராண்டு காலமும், சாதனையல்ல; வேதனை சோதனை. ஓராண்டு  திமுக ஆட்சியின் ஊழலை கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து கேட்கவில்லை?  ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் பாஜக இருக்குமா? அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள் என சீமான் கடும் விமர்சனம் செய்தார்.

‘அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள்..!” - சீமான் கடும் விமர்சனம்

தொடர்ந்து பேசிய அவர், 2024  நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பார்களா என கேள்வி எழுப்பினர். எனவே திமுக பாஜகவின் பி டீம் அல்ல, அவர்கள் தான் மெயின் டீம். 8 ஆண்டு மத்திய அரசு ஆட்சியில் ஊழலே இல்லை எனவும், செய்யவில்லை எனவும் சொல்பவர்கள் ரஃபேல் போர் விமான விவகாரத்தில் 400 கோடி ஊழல் குறித்து வாய்திறக்கவில்லை. நீதிமன்றம் ரபேல் குறித்து கேள்வி கேட்டதற்கு பதிலும் அளிக்கவில்லை. தமிழகத்தின் ஒரே எதிர்கட்சிகாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது. 2024 ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள், அதுவும் கிடைத்தால் 7 லிருந்து 10% ஆக வாக்கு வங்கி உயரும். நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் பொது மக்களிடம் கொண்டு செல்லும் பணி தொடர்ந்து நடைபெறும். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வோம் எனவும் பேசினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Embed widget