மேலும் அறிய

மதுரை முருக பக்தர்கள் மாநாடு பணி தீவிரம்.. மின்னொளியில் ஜொலிக்கும் மாநாட்டுத் திடல் !

முருக பக்தர்கள் மாநாட்டில் கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

முருக பக்தர்கள் மாநாட்டுப் பகுதிகளில் இரவிலும் பணிகள் தீவிரமாக தொடர்கிறது.
 
முருக பக்தர்கள் மாநாடு
 
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதான திடலில் நாளை ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். ஹிந்து முன்னணி சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில மாநாடு நடத்தப்படும். கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு முன்பு மாநில மாநாடு நடத்தப்பட்டது. கடைசியாக 2018ல் பல்லடத்தில் நடந்தது. 2023ல் நடக்க வேண்டிய மாநாட்டிற்கான பணிகள் தள்ளிப்போனது. ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்படும். திருப்பரங்குன்றம், சென்னிமலை விவகாரத்தையடுத்து முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 'முருக பக்தர்கள் மாநாடு' எனும் தலைப்பில் மதுரையில் நடத்தப்படுகிறது. திருப்பதி கோயில் எப்படி உலகம் போற்றும் வகையில் பாதுகாத்து, பராமரிக்கப்படுகிறதோ, அதுபோல் முருகனின் அறுபடை வீடுகளும் பராமரிக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
 
5 நாட்களில் 75 ஆயிரம் பேர் வந்து தரிசனம்
 
மாநாட்டுப் பணிகள் மும்முரமாக இரவிலும் நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் மேடையில் அறுபடை வீடுகள் அமைப்பு அமைக்கப்பட்டு மின்னொளியில் மாநாட்டு மேடை ஜொலிக்கிறது. மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 5 நாட்களில் 75 ஆயிரம் பேர் வந்து தரிசனம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.  நாளையும் அதிக அளவில் மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கின்னஸ் சாதனை முயற்சியா?
 
முருக பக்தர்கள் மாநாட்டு மேடை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இருக்கைகள், மின்விளக்கு கோபுரம் என அமைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதே போல் பல இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு அரங்கில் வெளியில் அதிகளவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முருக பக்தர்கள் மாநாட்டில் கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget