மு.க.ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி அவதூறு பேசுவதுதான் வேலை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மு.க.ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி அவதூறு பேசுவதுதான் 24 மணிநேரமும் வேலை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

FOLLOW US: 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:-

அவதூறு பேசும் வேலை 

மு.க.ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி 24 மணி நேரமும் அவதூறு பேசுவதுதான் வேலை. அவரிடம் விஷயம் இல்லை. என்னைப் பற்றிப் பேசுவதுதான் வேலை. அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு எந்தவித முகாந்தரமும் அவரிடம் இல்லை. அதனால்தான் எதையாவது பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். நான் முதல்வராக 4 வருடம் 2 மாதங்களாக இருக்கின்றேன். இந்த நீருக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றேன். விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்றினோம். அதன் மூலம் நீரைத் தேக்கிவைத்து கோடைக்காலங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வருகின்றோம். 

நானும் விவசாயி

மு.க.ஸ்டாலின் வாழ்ந்த வாழ்க்கை வேறு, நாம் வாழ்ந்த வாழ்க்கை வேறு. இங்குள்ள உங்களைப் போலத்தான் இன்றளவும் நானும் விவசாயம் செய்து வருகின்றேன். இன்றைக்கு ஸ்டாலின் வேளாண் சட்டம் பற்றிப் பேசி வருகிறார். வேளாண் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போம். ஆனால், அங்கு வட மாநிலத்தில் இடைத்தரகர்களால் விவசாயிகள் தூண்டிவிடப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.மு.க.ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி அவதூறு பேசுவதுதான் வேலை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

குரல் கொடுப்போம்

விவசாயத்தைப் பற்றியே ஸ்டாலினுக்குத் தெரியாது. அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரையில் விலை வீழ்ச்சி அடைகின்றபோது விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். அதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags: 2021 Stalin eps assembly election kurinchipadi

தொடர்புடைய செய்திகள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’ முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!

CM Stalin on DMK: ‛அடக்கப்பட்ட யானை... காட்டு யானை... கும்கி யானை...’  முதல்வர் பேச்சை கிண்டலடித்து வானதி ட்விட்!

போலீசார் தாக்கி பலியான வியாபாரி - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

போலீசார் தாக்கி பலியான வியாபாரி - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

மின் தடை கிண்டல்: டாக்டர் ராமதாஸிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

மின் தடை  கிண்டல்: டாக்டர் ராமதாஸிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

Cement price reduced: முதலமைச்சர் கோரிக்கை ஏற்று சிமெண்ட் விலை குறைப்பு!

Cement price reduced: முதலமைச்சர் கோரிக்கை ஏற்று சிமெண்ட் விலை குறைப்பு!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE : தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை உள்ளது - மத்திய அரசு..!

Tamil Nadu Coronavirus LIVE : தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை உள்ளது - மத்திய அரசு..!

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?