Sekar Babu : பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அண்ணாமலை! கடுமையாக தாக்கிய அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களில் ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்றால் அது அண்ணாமலை தான்

கோவிலில் அமைச்சர் ஆய்வு
சென்னை வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் திருக்கோயிலில் புதுப்பிக்கப்பட்ட குளத்தை திறந்து வைத்தார். உடன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
அதனை தொடர்ந்து ஐ.சி.எப் கமல விநாயகர் கோயில் பாலாலயம் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு ;
இன்றையை தினம் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஒரு நாளைக்கு 50 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நலனுக்காக முழு நேரம் திருக்கோவில் மேம்பாட்டிற்காக எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 20 திருக்கோவில்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரை மட்டத்திலிருந்து உயர்த்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 2,587 கோயிலில்களில் குடமுழுக்கு நடந்து உள்ளது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 3 ஆயிரம் கோடி அளவில் கூட கோவில் நிலங்கள் கூட மீட்கப்பட்டிருக்காது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து 7,171 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமையான இரவீஸ்வரர் திருக்கோயில் Lifting செய்யப்பட்டு வருகிறது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் குடமுழுக்கு நடைபெறும். அந்த கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் இன்று புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதே போல 220 திருக்கோவில்களில் திருக்குளங்கள் 120 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்கள் புரணமைக்க 427 கோடி செலவில் 274 கோவில்கள் புரணமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது என தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற தைப்பூசத்தின் போது அறுபடை கோயில்களில் முறையான ஏற்பாடு செய்யவில்லை தமிழகத்தில் இருக்கும் துறைகளில் இந்து சமய அறநிலையத்துறை தான் உதவாதத்துறை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்தான கேள்விக்கு ;
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளில் எடுத்துக் கொண்டால் ஒன்றுக்கும் உதவாத தினம் தோறும் பொய்களையே அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலை தான் எனவும் ஒரு காலத்தில் பத்தாயிரம் பேர் தைப்பூசத்திற்கு கூடும் நிலைமை இருந்தது ஆனால் தற்பொழுது ஒரு நாளைக்கு 2 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வருகிறார்கள் , தைப்பூசம் தினத்தன்று அதிக அளவில் மக்கள் கூடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால் போதிய வசதிகளை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
தைப்பூசம் தினத்தன்று தமிழ்நாட்டில் எந்த கோவில்களிலும் சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை , மூச்சுத் திணறல்கள் கூட ஏற்படவில்லை ஒழுங்காக நிம்மதியாக ஆன்மீக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் அரசாக உள்ளது. ஆன்மீகத்தில் தலையிட்டு அரசியலாக நினைக்கும் அண்ணாமலையின் கபட நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது, தமிழ்நாடு முதல்வர் இருக்கும் வரை அண்ணாமலையின் கனவு பகல் கனவாக தான் முடியும் என தெரிவித்தார்.
கும்பமேளா கூட்ட நெரிசலில் பல பேர் உயிரிழந்தது குறித்தான கேள்விக்கு
வடக்கில் நடக்கும் சம்பவங்கள் அண்ணாமலைக்கு கண்ணுக்குத் தெரியாது காதுக்கு கேட்காது , தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அண்ணாமலை எப்படி ஊதி பெரிதாக்கி இருப்பார்.
அண்ணாமலையின் எண்ணங்கள் முழுவதும் கலங்கப்பட்டுள்ளது , கள்ள எண்ணம் என்பதால் அண்ணாமலையின் எண்ணத்திற்கு அரசு செய்து வரும் செயல்கள் தெரியாது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கோவில்களில் செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து பதிலளித்த அமைச்சர்
பல திருக்கோவில்களில் இலவசமாக மோர் வழங்கப்பட்டு வருகிறது , பல திருக்கோவில்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விகடன் இணையதளம் பக்கம் முடக்கம் குறித்தான கேள்விக்கு ,
விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத அரசு மத்திய அரசு , ஜனநாயகத்தில் பத்திரிக்கை துறை என்பது நான்கு தூண்களில் ஒன்று ஆகவே எதிர்மறையான கருத்துக்களை ஏற்கக் கூடிய அரசு என்றால் அது திராவிட மாடல் அரசாங்க தான் இருக்க முடியும் , பாஜகவின் ஓர வஞ்சனை அதிகார துஷ்பிரயோகம் என்ன என்பதை நீங்கள் தான் கொண்டு வர வேண்டும்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அண்ணாமலை போன்றவர்களின் கூற்றையெல்லாம் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
அண்ணாமலை காலத்தில் தான் பாஜக வளர்ந்ததாக சொல்கிறாரே தவிர அவருடைய காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.
இதையும் படிங்க: Crime: 64 வயது மூதாட்டி கற்பழிப்பு, கழுத்தை அறுத்து கொன்ற சகோதரர்கள் - நடந்தது என்ன?
அண்ணாமலை பொய்களையே தினம் தோறும் அறுவடை செய்து கொண்டிருந்தால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் முழுவதுமாக பாஜகவை தமிழக மக்கள் ஓரம் கட்ட தயாராகி விடுவார்கள். எப்படியாவது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி ஒரு பிளவு அரசியலை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி முயற்சி செய்கிறது.
முருகருக்கு அதிக முக்கியத்துவம் தருகிற ஆட்சி என்பதால் தான் அனைத்து உலக முருகர் மாநாடு நடைபெற்றது. நீ வேலை கையிலே எடுத்துக் கொண்டு நடந்து வந்தாலும் சரி, வேலை எடுத்து ஓடி வந்தாலும் சரி, வேலை கையில் எடுத்து உருண்டு வந்தாலும் சரி, அண்ணாமலை போன்றோர் போலியாக காவிடிகளை சுமந்து சென்றாலும் சரி முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி , தமிழ்நாடு முதல்வரின் கரத்தை தான் தமிழக மக்கள் பலப்படுத்துவார்கள் என தெரிவித்தார்.





















