மயிலாடுதுறை திமுகவில் 2 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம்
மயிலாடுதுறையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் இரண்டு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது ஒருபுறம் இருக்க அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், ஒரு சில மாநில கட்சிகள், பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.
மேலும், அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் பலத்தை நிருபிக்க தங்கள் கட்சியை பல படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்தல், கட்சி விட்டு சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பணிகளை தற்போது முடித்துவிட்டு உறுப்பினர்களை சேர்த்தல் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
Share Market: வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் கலந்துகொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளில் ஒன்றியம் நகரம் மற்றும் பேரூர் வாரியாக புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது குறித்து பேசினர். தொடர்ந்து நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்களுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் வழங்கினர்.
ABP Nadu Exclusive: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய 'விடுதலை' திரைப்படம் - என்ன நடந்தது?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

