Share Market: வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை; 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி!
Share Market: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
Share Market Today: நிதியாண்டின் தொடக்க வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 47.78 % அல்லது 0.084 % புள்ளிகள் குறைந்து 58,949.25 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி -9.65% அல்லது 0.046% புள்ளிகள் குறைந்து 17,348.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
வர்த்த நேர தொடக்கத்தில், ஏற்றத்தில் தொடங்கிய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தமாகி வருகிறது.
லாபம்-
ஹீரோ மோட்டர்கார்ப், ஓ.என்.ஜி.சி. மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டஸ், பஜார்ஜ் ஆட்டோ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, கோல் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பாரதி ஏர்டெல், திவி லெப்ஸ், யு.பி.எல்., பஜார் ஃபினான்ஸ், டைட்டன் கம்பெனி, கோடாக் மஹிந்திரா, பஜார் ஃபின்சர்வ், டாடா மோட்டர்ஸ், விப்ரோ, இந்தஸ்லேண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவனங்களில் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டம்:
அதானி எண்டர்பிரைஸ், ஜெ.எஸ்.டபிள்யு. ஸ்டீஸ், இன்ஃபோசிஸ், சிப்ளா, ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், டெக் மஇந்திரா, ஐ.டி.சி., டி.சி.ஸ். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சன் ஃபார்மா, அப்பல்லோ மருத்துவமனை, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ்,டாடா ஸ்டீல், பிரிட்டானியா, லார்சன்,நெஸ்லே, பவர்கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
. கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக சவூதி அரேபியா எடுத்துள்ள முடிவு இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு:
இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.45 ஆக உள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
உலக அளவில் நிலவும் பணவீக்கம் கடும் நெருக்கடியை உருவாக்கி வரும் நிலையில், ’ஒபெக்' (OPEC) எனப்படும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் சவூதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தது.
கச்சா எண்ணெய் விலையை கணிசமான அளவு உயர்த்தியுள்ளது. ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் உற்பத்தியைக் குறைப்பதாக எடுக்கப்பட்டுள்ள முடிவு பணவீக்கத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க..
Kerala Train Fire: ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர்... சிக்கிய ஆதாரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்