மன்னார்குடி ராஜகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலம் திமுக நிர்வாகிகளிடம் உள்ளது - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்
இந்துக்களின் உரிமைகளை மீட்க இந்து முன்னணி சார்பில் ஜூன் 28ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கிய பிரச்சார பயணம் நேற்று கரூர் வந்தடைந்தது.
“மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அரசியல்வாதிகள் கைகளில் உள்ளது. குறிப்பாக திமுகவினரிடம் உள்ளது” என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறினார். இந்துக்களின் உரிமைகளை மீட்க இந்து முன்னணி சார்பில் ஜூன் 28 ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கிய பிரச்சார பயணம் நேற்று கரூர் வந்தடைந்தது.
அப்போது, காடேஸ்வரா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்து கோயில்களுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். தமிழக அரசு மதச்சார்பற்றது என சொல்லி வருகிறது. எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் குணமடைந்து தமிழ்நாட்டை நல்லாட்சி நடத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பம். கோயில்களின் வளர்ச்சிக்காகவே அந்த காலத்தில் மன்னர்களும், ஆன்மிகப் பெரியவர்களும் நிறைய நிலங்களை கோயிலுக்கு வழங்கியுள்ளனர். நீதிமன்றம் கூட எந்த பயன்பாட்டுக்காக நிலம் வழங்கப்பட்டதோ அந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. தமிழகத்திலே திருக்கோவிலுக்கு சொந்தமாக ஐந்தே கால் லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. நாலே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக கணக்கு கூறுகிறார்கள். மீதி 50 ஆயிரம் நிலம் எங்கே உள்ளது என்பதை அரசு கண்டுபிடிக்க வேண்டும். அதை விட்டு கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அரசியல்வாதிகள் கைகளில் உள்ளது. குறிப்பாக திமுகவில் இடம் உள்ளது. இங்கு 13 ஏக்கர் நிலத்தில் கிறிஸ்தவர்கள் கல்லூரி கட்டியுள்ளனர். அதில் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த இரண்டு குளங்கள் மூடப்பட்டு கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்று குற்றம் சாட்டிய காடேஸ்வரா சுப்பிரமணியன், தொடர்ந்து 150க்கு மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சட்டவிரோத சர்ச்சுகள் உள்ளன. அவற்றை இந்த அரசு அப்புறப்படுத்தவில்லை. அவர்களுக்கு ஆதரவாக இந்த அரசு உள்ளது. இந்துக்களுக்கு விரோதமாகவே இந்த அரசு செயல்படுகிறது.
மகாராஷ்டிராவை போலவே தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக கட்சிகாரர்களும் உளவுத்துறையும் கூறிவருகின்றனர். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எல்லாம் காலம் கடந்து விட்டது. வலிமையான எதிர் கட்சியாக இருக்க வேண்டும் என்பது விருப்பம் அதிமுகவின் தற்போதைய நிலை வருந்தத்தக்கதே என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்