மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க மோடிக்கி துணிச்சல் இருக்கா.. - மாணிக்தாகூர் கிடுக்குப் பிடி !
அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவும் வரி விதிக்க வேண்டும். ஆனால் அதற்கு தைரியம் இல்லாமல் ஆசிரியரைப் பார்த்து பயப்படும் மாணவன் போல் மோடி உள்ளார் - மாணித்தாகூர் எம்.பி.

மாணிக்தாகூர் எம்.பி
Source : whats app
மோடி தொட்ட எந்தக் கட்சியும் விளங்காமல் தான் போகும். இதில் கடைசியாக விழப்போவது எடப்பாடி தான்.
மாணிக்தாகூர் எம்.பி செய்தியாளர் சந்திப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வன்னி வேலம்பட்டி கிராமத்தில் 22 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடத்தை திறந்து வைத்து அப்பக்கரை, ரங்கபாளையம் கிராமத்தில் தலா 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடையு அமைப்பதற்காக நடைபெற்ற பூமி பூஜை விழாவில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக் தாகூர் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் எம்பி.
எடப்பாடி பழனிசாமி 100 நாள் வேலை திட்ட நிதியை நாங்கள்தான் பெற்றுக் கொடுத்தோம் எனக் கூறுவது குறித்த கேள்வி
பழனிசாமி, எதற்கெடுத்தாலும் நான் தான் செய்தேன், என்று சொல்வதை நிறுத்த வேண்டும். 100 நாள்வேலை திட்டத்தில் 200 பேர் பணியாற்றிய நிலையில் தற்போது 50 பேர் தான் பணியாற்றி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக 200 பேராக இருந்தவர்கள் 150, 100 தற்போது 50 பேர் என மோடி அரசு குறைத்துள்ளார்கள்.100 நாள் வேலை திட்டத்தை தமிழகத்தில் முடக்க மத்திய அரசு முயல்கிறது. அதற்கு எடப்பாடி ஒத்துப் போகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 64 பேரும் இதற்காக குரல் எழுப்பி வருகிறோம்.
ஆப்பரேஷன் சிந்தூர்தொடர்பாக பிரதமர் மோடிபேசியது குறித்த கேள்விக்கு
ஆப்பரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்க அதிபர் டிரம்ப் என சொல்வது உண்மையா? பொய்யா? பொய் என்றால் அதை சொல்ல வேண்டியது தானே. அதை விடுத்து விட்டு ராகுல் காந்தியின் கேள்விக்கு பயந்து மாநிலங்களவைக்கு வருவதை தவிர்த்து விட்டார். இந்தப் போரில் பாகிஸ்தானை வென்றாலும் மோடியின் செயல்பாடுகளால் இந்த வெற்றிக்கு தார்மீக பொறுப்பு ஏற்க முடியாமல் போய்விட்டது, என்பதுதான் உண்மை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்தியது தொடர்பாக வாரணாசியில் பேசிய மோடி அனைவரும் இந்திய பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனக் கூறியது குறித்த கேள்விக்கு
சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்று போகும் என்ற வகையில் மோடி பேசி வருவது அர்த்தமற்றது. அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும். அதை விடுத்து பொறுப்பற்ற முறையிலும் என்ன செய்வது என்று தெரியாமல் செயல்படுகிறார். டிரம்ப்பை பார்த்தால் பள்ளி மாணவன் ஆசிரியரை பார்த்து பயப்படுவது போல், மோடி செயல்படுகிறார். ட்ரம்ப் விதித்த 25 சதவீத வரி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
பாஜகவில் இருந்து விலகியதாக ஓபிஎஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு
சங்கி கூட்டம் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்பது இப்போதாவது தெரிந்ததே ஓபிஎஸ்-க்கு. உண்மையிலேயே நன்றாக இருந்த மனிதரை ரோட்டில் உட்கார வைத்து, ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்து ஒழுங்காக இருந்த கட்சியை உடைக்க வைத்து, எல்லா வேலைகளையும் செய்தது பாஜக,ஆர் எஸ் எஸ் தான். நல்ல மனிதரை வடிவேல் திரைப்பட பாணியில் பெரிய ரவுடியை கொண்டு வந்து சாணி அடிக்க விட்டதை போல் ஓபிஎஸ்ஸை நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். மோடியை சந்திக்க வைப்பதற்கு நயினார் நாகேந்திரன் அரசியல் செய்துள்ளார். ஆறு முறை போன் செய்தும் எடுக்காமல் இருந்துள்ளார். இந்த நிலை அவருக்கு வந்திருக்கக் கூடாது.
மதுரைக்காரனுக்கும் - தேனிக்காரனுக்கும்
ஓபிஎஸ் மிக நல்ல மனிதர் எல்லோரும் மதிக்கக்கூடிய ஒரு நபர் தென் மாவட்டங்களில்அரசியலை மீறி மதிக்கக் கூடிய ஒரு நபர். அவருக்கு நடந்த அவமானம் ஒவ்வொரு மதுரைக்காரனுக்கும், தேனி காரனுக்கும் நடந்த அவமானமாக பார்க்க வேண்டும். பாஜக வேலையே ஒவ்வொரு கட்சியையும் உறவாடி கொள்வதுதான். இதே போல் தான் விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்து தேமுதிக கட்சியை அழித்தார்கள். மோடி தொட்ட எந்தக் கட்சியும் விளங்காமல் தான் போகும். இதில் கடைசியாக விழப்போவது எடப்பாடி தான். விரைவில் அவர் உடன் இருக்கும் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி அனைவரும் பாஜகவில் இணைவார்கள்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement




















