மேலும் அறிய
மதுரையில் அபாகஸ் சாதனை, 3 நிமிடத்தில் 30 கணக்குகள்: 4500 மாணவர்கள் அசத்தல்!
தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் இந்திய அளவில் நடைபெறும் அபாகஸ் போட்டி தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் - எனவும் தெரிவித்தனர்.

அபாகஸ் சாதனை
Source : whats app
மதுரையில் மாநில அளவிலான அபாகஸ் தேர்வு; 4500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு. மூன்று நிமிடத்தில் 30க்கும் மேற்பட்ட கணிதம் போட்டு அசத்தல்.
ப்ரைனோ ப்ரைன் அபாகஸ்
மதுரை தமுக்கம் மைதானத்தில் (ப்ரைனோ ப்ரைன் அபாகஸ்) தனியார் அகாடமி சார்பில் மாநில அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 4500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு நேரமானது மூன்று நிமிடம் நிர்ணயிக்கப்பட்டு ஒரு பிரிவிற்கு 650 மாணவ மாணவிகள் விகிதம் 7 பிரிவுகளாக நடைபெற்றது.
தேர்வு செய்யும் மாணவ - மாணவிகள் இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு செல்வார்கள்
மாணவ மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 நிமிடத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு துரிதமாக செயல்பட்டு விடையளித்தனர். மூன்று நிமிடத்தில் 30க்கும் மேற்பட்ட கணிதம் போட்டு அசத்தினர். பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம்- சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யும் மாணவ, மாணவிகள் இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஞாபக சக்தி நிதான தன்மை அறிவுத்திறன் ஆகியவை அதிகரிக்கும்
இது குறித்து தனியார் (ப்ரைனோ ப்ரைன் கிட்ஸ்) அகடாமியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த சுப்பிரமணியன் கூறும்போது...,” இந்த அபாகஸ் பயிற்சி மற்றும் தேர்வு மூலம் மாணவர்களின் ஞாபக சக்தி நிதான தன்மை அறிவுத்திறன் ஆகியவை அதிகரிக்கும். இது போன்ற அபாகஸ் போட்டி தேர்வுகள் நாடு முழுவதும் மாநில மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகள் இந்திய அளவில் நடைபெறும் அபாகஸ் போட்டி தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்” என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















