மேலும் அறிய
Advertisement
மணிப்பூர் கலவரம் விவகாரம்..! காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் குதித்த மக்கள் நீதி மையம்..!
" காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 100க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியினர் கலந்து கொண்டனர் "
மணிப்பூர் கலவரத்தை தடுத்து நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் கண்டித்து மக்கள் நீதி மையம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 100க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதி மையம்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): மணிப்பூர் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மணிப்பூர் அரசையும், மத்திய அரசைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று மண்டல தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் நீதி மையத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தெரிவித்தார். காஞ்சிபுரம், சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 10 மண்டலங்களில் உள்ள தலைநகரங்களில் மக்கள் நீதி மையம் சார்பில் மணிப்பூர் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக
காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் தலைநகரங்களில் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் நீதி மையத்தில் மாநிலச் செயலாளர் S.K.P.S.கோபிநாத் தலைமையில் 100க்கு மேற்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியினர் மணிப்பூர் வன்முறை கட்டுப்படுத்த இயலாத செயலற்ற மணிப்பூர் மாநில பாஜக அரசை கலைக்க தவறிய பொறுப்பற்ற மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக மக்கள் நீதி மையக் கட்சியினர் தெரிவித்தனர். மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் எழுதியவர் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion