மேலும் அறிய

திருப்பரங்குன்றத்திற்கு ரோப் கார் திட்டம் என்ன ஆட்சு? - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கேள்வி !

பட்டா பிரச்னையை திமுக தவறாக கையாளுகிறது திமுக நிர்வாகிகள் தவறாக கையாளுகிறார்கள் இரண்டு மாதம் பொறுங்கள் நிர்வாக திறமையால் அனைவருக்கும் தவறில்லாமல் பட்டா வழங்கப்படும். - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா.

தினமும் ஒரு கோவிலில் இருக்கும் அறநிலையத்துறை அமைச்சர் நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு முறை கூட திருப்பரங்குன்றம் கோவிலில் ஆய்வு நடத்தவில்லை -முதல் படை வீட்டில் ரோப் கார் என எந்த நல்ல திட்டங்களும் செய்யவில்லை.

நலத்திட்ட உதவியில் ராஜன் செல்லப்பா
 
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் வி.வி ராஜன் செல்லப்பா ,மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி. ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா பேசியதாவது...,” கடந்த நான்கரை ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் எடப்பாடியார் செய்தார் குறிப்பாக மதுரையில் வளர்ச்சி திட்டங்களை செய்தார். ஆனால் திமுக அரசு இந்த நான்கரை ஆண்டுகளில் மதுரையில் கருணாநிதி நூலகமும், ஜல்லிக்கட்டு அரங்கத்தை தவிர வேறு எதையும் செய்யவில்லை. ஆனால் முதலமைச்சர் மதுரைக்கு வந்த போது வளர்ச்சி திட்டங்களை அமைய வேண்டும் அதற்காக சிந்திக்கிறேன் என்று கூறுகிறார். இன்னும் இரண்டு மாதத்தில் திமுக ஆட்சி வீட்டுக்கு போகப் போகிறது இந்த ரெண்டு மாதத்தில் என்ன திட்டங்களை செய்யப் போகிறார்கள்? 
 
அமைச்சர் ஆய்வு செய்யவில்லை
 
மதுரை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்கள் மேயர், மண்டல தலைவர் இல்லை மக்கள் பணிகள் முடங்கி போய் உள்ளது. இன்றைக்கு தமிழகத்தின் கடன் சுமை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. இதுதான் திமுக அரசின் சாதனையாகும். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் ரோப்காருக்கு 23 கோடி என்று கூறிவிட்டு 5 கோடி மட்டும் ஒதுக்கி உள்ளார். இதனால் பணிகள் நடைபெறவில்லை. தற்போது திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக பணியும் அரைகுறையாக தான் நடைபெற்று உள்ளது. அறுபடை வீட்டின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை பழனி, திருச்செந்தூர் போன்ற கோவிலுக்கு இணையாக நாங்கள் உருவாக்க நினைத்தோம். தற்போது திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்பொழுது இந்த நான்கரை ஆண்டு காலம் அறநிலையதுறை சார்பில் ஒரு முறை கூட கோவிலை ஆய்வு செய்யவில்லை. 
 
ஆய்வு செய்யவில்லை
 
திருப்பரங்குன்றம் கோவிலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்யவில்லை ஏனென்றால் வந்தால் தீபம் ஏற்றும் நிலை வந்துடுகின்ற பயத்தில் அமைச்சர் சேகர்பாபு உள்ளார். இன்றைக்கு திமுக அரசியல் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது குற்றவாளிகள் தவறு செய்தால் 90 நாட்களே வெளிவந்து விடுகிறார்கள் இதனால் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்பொழுது மகளிர்க்கு 1500 ரூபாயாக உரிமை தொகை வழங்குவார். பட்டா பிரச்சனையை திமுக தவறாக கையாளுகிறது அந்த தவறை முறியடிக்கிற பணியில் உறுதியாக இன்னும் இரண்டு மாதம் பொறுங்கள் முறையாக நிர்வாக திறமையின் காரணமாக எல்லோருக்கும் முறையாக தவறில்லாமல் பட்டா வழங்க ஆவணம் செய்வோம் என்றார்.
 
பதில் காணவில்லை
 
நிகழ்ச்சியில் ராஜ்சத்யன் கூறியதாவது...,” திமுக ஆட்சியில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களமாக உள்ளது. இன்றைக்கு இந்த திமுக அரசு ஒரு விளம்பர அரசாகத்தான் உள்ளது குறிப்பாகமக்கள் சேவை செய்வதை காட்டிலும் பொழுதுபோக்கு உள்ள அரசாக தான் இந்த அரசு உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் காலரை தூக்கிக்கொண்டு சவால் விடுகிறார் கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 5 சகவீதம் கூட செய்யவில்லை என கூறுகிறார்.  இதற்கு எடப்பாடியார் பகிரங்கமாக சவால் விடுத்து அதிமுக செய்த சாதனை திட்டங்களையும், இனிமேல் செய்ய போகும் சாதனை திட்டங்களையும், தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியது இது குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா என்று கேள்வி எழுப்பினார். அன்றைக்கு காலரை தூக்கிக்கொண்டு சவால் விடுத்த ஸ்டாலின் இன்றைக்கு துண்டால் வாயை மூடிக் கொண்டு அமைதியாக உள்ளார். இதுவரை பதிலே காணவில்லை என பேசினார்.
 
தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
Embed widget