மேலும் அறிய
மதுரைக்காரங்க ஏன் ஃபயரா.. இருக்காங்கன்னு அஜித்குமார் கேட்டது ஏன்? - பரோட்டோ சூரி உருக்கம் !
நடிகர் சூரி: சினிமா கனவு முதல் Managing Director அறை வரை! மதுரைக்காரங்க ஏன் பயரா இருக்காங்கன்னு அஜித் கேட்டது ஏன்?

பரோட்டா சூரி
Source : whatsapp
சூரியை பார்த்து நடிகரும் ரேசருமான அஜித்குமார் எந்த ஊர் நீ என்றார் உடனே சூரி மதுரை என்று சொன்னவுடன் இந்த மதுரக்காரங்க மட்டும் ஏன் சார் இவ்வளவு ஃபயராக இருக்கிறார்கள் என்று கூறியதாக அஜித்துடன் தனது நினைவுகளை மாணவர்களிடம் சொன்னா சூரி.
கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் சூரி
சொந்தமாக தொழில் தொடங்கி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தருவது குறித்து இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காமராஜர் அரங்கத்தில் "இணைப்பு" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றினார். தொடர்ந்து திரைப்பட நடிகர் சூரி கூறும் போது...,” சிறப்பு விருந்தினர் ஒருவர் பேசும்போது சொன்னார் மதுரையில் நல்ல ஹோட்டல் இல்லை என்று உயிரே போயிருச்சு பேசிக்கிட்டே இருக்கும் போது மதுரையில் நல்ல ஓட்டல் இல்லை 25 வருஷம் உழைப்பே போயிருச்சு. அப்புறம் தான் அவரு அறை(room) உள்ள நல்ல ஓட்டல் இல்லை என்று சொன்னது விளங்கியது. உலகத்தில் நம்ம எல்லோரும் முன்னாடி மரியாதையாக நிற்பதற்கு பணம் ரொம்ப முக்கியம். நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பங்களா வைத்திருந்தாலும் உடம்பு சரியில்லை என்றால் இது அனைத்தும் வேஸ்ட் நீ சம்பாதித்தது நீ உருவாக்கிய சாம்ராஜ்யத்தை நீ அனுபவிக்க வேண்டும் வீட்டில் உள்ளவர்கள் அனுபவிக்க வேண்டும் அதுனால உடம்ப பாத்துக்கோங்க.
கண்கலங்கிய சூரி
நீண்ட சிரமத்திற்கு பின் ஒரு வழியாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்து. எனக்கு டிரஸ் அளவு எடுத்த போது எனக்கு கை காலெல்லாம் நடுங்கி கண்ணு கலங்கியது. வாய்ப்பு கிடைத்து ஷார்ட் எடுத்து பின்னர் இன்னொருவர் அந்த கேரக்டருக்கு ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க உடனே சட்டையை கழட்டுங்கள். அதே இடத்தில் சட்டையை கழட்டினேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கண்கலங்கினார். ஒரு நிமிடம் உரையை நிறுத்தி மீண்டும் தொடர்ந்து அவர் எல்லோருக்கும் நடக்கும் எனக்கும் நடந்தது. அதன் பிறகு போராட்டம், போராட்டம் தான். அதுக்கப்புறம் ஒரு வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து விட்டேன், அருகில் இருந்தவர்கள் டீ கொடுத்து எழுப்பி விட்டார்கள். 2008ல தான் வெண்ணிலா கபடி குழு படம் வாய்ப்பு கிடைத்தது அஜித் சாரின் ஜி படத்தில் சிறிய வேடம் நடித்தேன்.
அஜித் சொன்ன வார்த்தை
ஒருதடவை அஜித் சார் கேட்டார்.. அப்போது எனக்கு சண்டைக் காட்சியில் மண்டை உடைந்து விட்டது. கூப்பிட்டு யார் நீ பார்த்து பண்றது இல்லையா? எந்த ஊரு? மதுரை சார். உடனே அஜித் சார் இந்த மதுரைக்காரங்க மட்டும் ஏன் இவ்வளவு ஃபயரா இருக்காங்க என்று சொன்னார். துருதுருன்னு இருக்காங்க ஒன்னு சொன்னா நாலா பண்றான் சொன்னாரு. இதுதான் எனக்கு கொஞ்சம், கொஞ்சமா நம்பிக்கை கொடுத்தது கொடுத்தது.
உறவுகளை இழக்காதீர்கள்
பல வலிகளை தாண்டி சூரி இன்னைக்கு இங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கு. வாழ்க்கையில நிறைய அவமானங்கள் வரும் எதையும் ஒரு செகண்ட் காதில் வாங்காதீர்கள், ரியாக்ட் பண்ணாதீர்கள். உங்கள் இலக்கு நோக்கம் முதல் தோல்வி வரும், ஆசைப்பட்டு ஜெயிச்சவனை விட அடிபட்டு ஜெயிச்சவன் தான் இங்கு பல பேர். அடிபட்டு ஜெயிச்சவினிடம் இருக்கும் தெளிவு, ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது. கடவுள் எல்லாத்தையும் தூக்கி விடுவார், விழுந்து எந்திரிக்கணும் என்று நினைக்கிறவனை கடவுள் நிச்சயமாக தூக்கி விடாமல் இருக்க மாட்டார். போன் பார்த்து, பார்த்து உறவுகளை விட்டு விடாதீர்கள் உறவுகள் ரொம்ப முக்கியம். உறவுகளை விடாதீர்கள் நான் சூரி நிக்கிறேன், என்றால் அதற்கு முழு காரணம் குடும்பம் தான். குடும்பம் இல்லை என்றால் நான் இல்லை குடும்பத்தை விடாதீர்கள் என உரையை நிறைவு செய்தார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















