மேலும் அறிய
திமுக அரசு திருப்பரங்குன்றம் மலையின் மீது இனிமேலாவது தீபம் ஏற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன் !
உயிரை மாய்த்துக் கொள்வது என்பது தவறான செயல், தொடர்ந்து போராட வேண்டும். நீதியை வெல்ல வேண்டும், உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. - நயினார் நாகேந்திரன்

நயினார் நகேந்திரன்
Source : whatsapp
திமுக அரசு திருப்பரங்குன்றம் மலையின் மீது இனிமேலாவது தீபம் ஏற்ற வேண்டும் - கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது , உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை நிச்சயம் வழங்க வேண்டும் - மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
நயினார் நாகேந்திரன்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பூர்ண சந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வருகை தந்தனர். தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து பாஜக இந்து அமைப்பு சார்பில் பத்து லட்ச ரூபாய் காசோலையை அவரது குடும்பத்தாருக்கு வழங்கினர். தொடர்ந்து பாஜக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து வரும்போது...,” இந்த பிரச்சனையில் அரசியல் காட்டாமல் முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
நீதியை வெல்ல வேண்டும், உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது.
திமுக அரசு இனிமேலாவது தீபம் ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாளை தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பூரண சந்திரன் மனைவிக்கு அரசு வேலை, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் கொடுக்கிறார்கள். நான் குறை கூறவில்லை. உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை நிச்சயம் வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் நம் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் வரலாம். உயிரை மாய்த்துக் கொள்வது என்பது தவறான செயல், தொடர்ந்து போராட வேண்டும். நீதியை வெல்ல வேண்டும், உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது.
2026 நிச்சயமாக அது நடந்தே தீரும்
கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்த இந்த சிலையின் அருகே உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என சொல்வது. இது மதம் சார்ந்த பிரச்சனை அல்ல, இது தமிழரின் பண்பாட்டு உரிமை. இனிமேலாவது முதல்வர் கவனம் செலுத்தி தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 2026 நிச்சயமாக அது நடந்தே தீரும்” எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















