'தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு பாஜக அமலாக்க துறையை அனுப்பட்டும்' - அண்ணாமலைக்கு ஜோதிமணி சவால்
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூரிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலை பெண் என்பதால் விட்டு வைக்கிறேன். என்று என்னை கூறியது கண்டிக்கதக்கது.
தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு பாஜக அமலாக்கத் துறையை அனுப்பட்டும் என அண்ணாமலைக்கு சவால் விடுத்து கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேட்டியளித்துள்ளார்.
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூரிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெண் என்பதால் விட்டு வைக்கிறேன் என்று என்னை கூறியது கண்டிக்கதக்கது. பாஜக அமலாக்கதுறையை ஏவி அரசியல் செய்கிறது. தைரியம் இருந்தால் என் வீட்டுக்கு அமலாக்க துறையை அனுப்பட்டும். அங்கே கஞ்சி போட்ட காட்டன் சேலைகளை தவிர வேறு எதுவும் கிடைக்காது.
நேர்மையாக இருக்கும் பெண் நான். அண்ணாமலை போல, தனிநபர் தாக்குதல் நடத்தும், தூய்மையற்ற அரசியல் வாதி நான் இல்லை. கர்நாகாவில் நேர்மையற்ற காவல் துறை அதிகாரியாக இருந்து, பாஜகவுக்கு வேலை செய்து வந்தார். வசூல்ராஜா போல், ஊழல்வாதியாகவும் இருந்துள்ளார்.
அண்ணாமலை எந்த அரசியல் பின்புலமும் கொண்டவர் அல்ல. மக்கள் பிரதிநிதியாகவும் இல்லை. அவருக்கு எதுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு. ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் அளவில் மக்கள் வரி பணத்தை பயன்படுத்தி வருகிறார். மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். ஆட்சி மாறும் போது அவரது ஊழல் வெளிச்சத்துக்கு வரும். கர்நாடகா துணை முதல்வரிடம் பணம் பெற்றுள்ளீர்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். நான் நேர்மையான அரசியல்வாதி விவசாய குடும்பத்தில் பிறந்த எனது நேர்மையை பார்த்து பொறுப்புகளை வழங்கி வருகின்றனர்” என்றார்.