ஸ்ரீபெரும்புதூர் MLA சீட்: காதலுக்காக அதிமுக நிர்வாகி வைத்த 'ரகசிய' கோரிக்கை! என்ன தெரியுமா?
"காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக நிர்வாகிகள ஆலோசனை கூட்டம் நடைபெற்றது"

"காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், தனது காதலை சேர்த்து வைக்க வேண்டும் என மறைமுகமாக சட்டமன்ற உறுப்பினர் சீட் கேட்ட அதிமுக நிர்வாகி செந்தில் ராஜன்"
காஞ்சிபுரத்தில் அதிமுக கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், அதிமுக சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடரப்பாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் ஏற்பாடு செய்திருந்தார்.
"காதலை சேர்த்து வையுங்கள்"
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய செந்தில் ராஜன், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால், முயற்சி,பயிற்சி மற்றும் தொடர்ச்சி இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மேடையிலேயே மறைமுகமாக தனக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் ஒதுக்க வேண்டும் என கேட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கட்சியில் இருக்கும் எனக்கு ஒரு கனவு இருக்கிறது, தனது தந்தைக்கும் ஒரு கனவு இருந்தது. நான் காதலிக்கும் பெண்ணை மனம் முடித்துக் கொடுக்க வேண்டும் என மேடையில் இருந்த மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் ஆகிய இருவரையும் கேட்டுக்கொண்டார். நீண்ட காலமாக காதல் இருக்கிறது, என் தந்தைக்கு இருந்தது அவரால் அடைய முடியவில்லை. எனக்கு இருக்கிறது. நான் காதலிக்கும் பெண்ணை மனம் முடித்து தர வேண்டும். நான் காதலிக்கும் பெண்ணை மனம் முடித்து தருவீர்களா ? என்பதை காலம் பதில் சொல்லும் என தெரிவித்தார்.
"நகைச்சுவையாக பதில் கொடுத்த வைகைச் செல்வன்"
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், ஒரே பெண்ணை பலரும் காதலிப்பது தான் பிரச்சனையாக இருக்கிறது. வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை வேறு ஒருவருடன் திருமணம் செய்து விட்டால் அது ஈவிடிசிங் என சொல்லிவிடுவார்கள். அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்று இருந்தால் திருமணம் செய்து வைத்துவிடலாம்.
தாகித்தவன் தண்ணீரை தேடினான், தண்ணீரும் தாகித்தவனை தேடியது என்பதைப் போல் இருக்க வேண்டும். நானும் ஒரு காலத்தில் ஒரு பெண்ணை காதலித்து தான் வந்தேன், இடையில் நாடாளுமன்ற பெண்ணைக் கூற காதலித்து வந்தேன். மாவட்டச் செயலாளர்கள் கூட அப்படிதான் காதலித்து வந்தார். என் காதல் 2011 ஆம் ஆண்டு நிறைவேறியது, என விளையாட்டாக பேசியது சிரிப்பாலையை ஏற்படுத்தியது. அருமை நண்பருக்கும் அதுபோல் ஒரு காதல் அமைய வேண்டும் என வேண்டுகிறேன் என தெரிவித்தார்.





















