தி.மு.க., ம.தி.மு.க.வினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

தாராபுரத்தில் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகளில் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. .

FOLLOW US: 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர்  தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தி.மு.க., ம.தி.மு.க.வினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் தனசேகருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று மாலை முதல் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சில முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வாக்குப்பதிவிற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், திடீரென நடைபெறும் இந்த வருமானவரித்துறை சோதனை தி.மு.க., ம.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் கயல்விழி போட்டியிடுகிறார். இதோ தொகுதியில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: dmk 2021 Stalin Election mdmk it raid assembly vaiko

தொடர்புடைய செய்திகள்

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக  தீர்மானம்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!