ஐடி ரெய்டு திமுக வெற்றியை பாதிக்காது - திருமாவளவன்

மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையால் தி.மு.க.வின் வெற்றி ஒருபோதும் பாதிக்காது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US: 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று காலை திடீரென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணாநகர் வேட்பாளர் மோகன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, திருவண்ணாமலை தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இதுதொடர்பாக, வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

“ஆளும் கட்சிகளான அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தேர்தல் தோல்வி பயத்தில் இன்றைக்கு தி.மு.க.வை அதன் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருமுகமாகத்தான் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தலுக்கு தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் ஒருபோதும் பணியாது. இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் தி.மு.க.வின் பணிகள் பின்தங்கிவிடும் என்று எண்ணினால் அவர்கள் எண்ணம் ஏமாற்றத்தில் தான் முடியும்.ஐடி ரெய்டு திமுக வெற்றியை பாதிக்காது - திருமாவளவன்

தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய போக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் உரிய பாடத்தை அவர்கள் கற்பிப்பார்கள். இவ்வாறு அச்சுறுத்தும் போக்கை அவர்கள் கைவிட வேண்டும். இந்தப் போக்கை  வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அ.தி.மு.க. அதன் கூட்டணியினர் எவ்வளவு தாராளமாக பணப் புழக்கத்தைச் செய்கிறார்கள் என்பதை, தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்ற வருமான வரித்துறை சோதனைகள் செய்யும் துறைகளுக்கு இது தெரியாமல் இல்லை. ஆனால், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சியினர் வீட்டில் போய் ரெய்டு செய்வது மிக மோசமான அநாகரிகமான ஒரு நடவடிக்கை. இதனால் தி.மு.க.வின், தி.மு.க. கூட்டணிகளின் வெற்றி ஒருபோதும் பாதிக்காது”.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: dmk election 2021 Stalin it raid vck senthamarai stalin daughter thirumavalavan dmk aliance

தொடர்புடைய செய்திகள்

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!